மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
Fig. 1
Kahlil Gibran Paintings
“Women’s Dream”
“பூமியில் தோன்றிய மனித இனம் உன்னத இறைவனின் ஆன்மா. அந்த மனித இனம் கந்தைகளை அணிந்து நிர்வாணத்தை மூடி எலும்புக் கன்னங்களில் கண்ணீர் வடித்த வண்ணம் தமது குழந்தைகளைப் பரிதாபமாய் விளித்துத் சிதைந்து போன இடங்களில் நின்று கொண்டிருக்கிறது. ஆனால் அவரது பிள்ளைகள் அன்னையர் அழுகை அரவங்களைக் கேட்க விடாமல் வாள் கத்திகளைத் தீட்டிக் கொண்டு தமது தேசீய கீதத்தைப் பாடுவதில் தீவிரமாய் முனைந்துள்ளார்.”
கலில் கிப்ரான்
“நான் என் பிறந்த தேசத்தைப் புகழ்ந்து பாடுகிறேன். சிறுவனாய் நான் வசித்த வீட்டைக் காண விரும்புகிறேன். ஆனால் அந்த இல்லத்தில் மக்கள் பயணிகளுக்குத் தேவையாக உணவு கொடுத்துத் தங்கியிருக்க மறுத்தால் எனது புகழ்ப் பாக்களை இரங்கற் பாக்களாய் மாற்றி வீட்டை மறக்க வேட்கை அடைவேன். அப்போது என்னுள்ளக் குரல் சொல்லும், “தேவையுள்ளோருக்கு ஆறுதல் அளிக்காத அந்த வீட்டைத் தகர்த்து அழி.” என்று.
கலில் கிப்ரான்
+++++++++
<< ஒரு கவிஞனின் கூக்குரல் >>
கவிதை -16 பாகம் -3
இன்னலில், துயரில்
எனக்கு ஆறுதல் அளிக்கும்
மெய்யான தோழன்
எனது ஆத்மாவே !
தனது சொந்த ஆத்மாவை
நேசிக்காதவன்
மனிதப் பகையாளி !
சுய வழி காட்ட
உள்ளத்தின் உள்ளே ஒன்றில்லாது
மரணம் அடைவான்
மனமுடைந்து !
வாழ்வு மலர்வது
ஒருவன்
உள்ளத்தின் உள்ளே தான்
வெளிப் புறத்தி லன்று !
+++++++++++++
நானொரு வார்த்தை
சொல்ல வந்தேன்
நானதைச் சொல்வேன்
இப்போது !
என் மரணம் உரைப்பதைத்
தடுத்தால்
நாளைக்குச் சொல்லப் படும்
அந்த வார்த்தை !
ஏனெனினில்
நீடிக்கும் சரித்திர நூலில்
வருங் காலம்
ஒருபோதும்
புறக்கணிக் காது
ஓர் இரகசியத்தை !
+++++++++++++
அன்பின் மகிமை,
அழகு மயத்தின் ஒளிச்சுடர்
கடவுளின் பிரதி பலிப்பு !
வாழப் பிறந்தேன் அவற்றில் !
அவ்விதத்தில்
வசிக்கிறேன் நானிங்கு !
துரத்த முடியா தென்னை
அந்த வாழ்வு
அரங்கத்தை விட்டு !
ஏனெனில்
மரணத்திலும் நான் வாழ்பவன்
உயிரோடு வாழும்
என் வார்த்தைகள் மூலம் !
++++++++++++
எனது கண்களை
நீ பறித்துக் கொண்டால்
காதல் முணு முணுப்புகள்
கேட்கும் எனக்கு !
எழில் மயக் கீதங்கள்
செவியில் விழும் !
நீ செவிகளை அடைத்தால்
காதல் நறுமணம்
கலந்து
தென்றல் தொடும்
இன்பத்தை உணர்வேன் !
அழகத் துவத்தின்
வாசனை நுகர்வேன் !
++++++++++
நானிங்கு பிறந்தது
அனைவ ரோடும்
ஒன்றாய் வாழ்வதற்கு !
அனைவ ருக்கும்
அன்போடு உதவு வதற்கு !
எனது தனிமையில்
நானின்று புரிவதை
ஏனைய மாந்தர்
எதிரொலிப்பார் நாளை !
+++++++++++
வெற்றிடத்தில் என்னை
விட்டு விட்டால்
வாழ்திடுவேன் நான்
என் ஆத்மா வோடு
இணைந்து !
அழகத் துவமும் காதலும்
பெற்றெடுத்த
குழந்தை என் ஆன்மா !
நானோர் இதயத்தின் மூலம்
ஓதுவ தெல்லாம்
நாளை
ஆயிரம் இதயங்கள்
வாயசைக்கும் !
************
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 6, 2009)]
- இது(ரு) வேறு வாழ்க்கை
- 15 வது கவிஞர் சிற்பி இலக்கிய விருது 2010
- மலேசியாவின் கலை இலக்கிய இதழ் ‘வல்லினம்’.
- தமிழ்ஸ்டுடியோ குறும்படவட்டம் (பதிவு எண்: 475/2009)-தொடக்க விழா
- வடமராட்சி இலக்கிய நிகழ்வுகள்
- பாடிப்பறந்த ‘வானம்பாடி’ கவிஞர் பாலா
- சாகித்திய அகாதமி: ரஸ்யாவில் உலகப்புத்தகக்கண்காட்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்
- நினைவுகளின் தடத்தில் – (35)
- பிரான்சிஸ் கிருபா கவிதைகள் – ஒரு பார்வை
- அன்புள்ள ஆசிரியருக்கு
- அறிவியலும் அரையவியலும் -2
- உயிரின் துடிப்பு
- தனிமையிலிருந்து தப்பித்தல்
- உள்வெளிப்பயணங்கள்
- வேத வனம் விருட்சம் 54
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -3
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 55 << சொந்த இல்லம் நோக்கி >>
- தொடரும்
- என் வரையில்…
- உன்னைப்போல் ஒருவன்
- நவீனத்துவம் – பின்நவீனத்துவம் கேரள மாநிலத்தில் தேசிய கருத்தரங்கம்
- குறுக்கெழுத்துப் புதிர் – அக்டோபர் 2009
- அடைக்கலப் பாம்புகள்
- ஆகு பெயர்
- அறிவியல் புனைகதை-9: நித்யகன்னி ரூபவாஹினி
- நினைவுகளின் பிடியில் ..
- மழைச்சாரல்…..
- தெய்வம் நீ என்றுணர்
- ஒரு புகைப்படத்தைப் பொருள்பெயர்த்தல்
- அந்த ஏழுகுண்டுகள்…..(1)
- தினேசுவரி கவிதைகள்
- தொடர்பில்லாதவை
- அகில நாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி மனிதரில்லா ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கி !
- முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ (1564-1642)
- பாத்திரத் தேர்வு
- சேரா துணை..
- சாயங்கால அறை
- புரிய இயலாத உனது அந்தரங்கம்
- சுழற்றி போட்ட சோழிகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -2
- படம்