பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 55 << சொந்த இல்லம் நோக்கி >>

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


இல்லத்துக்குப் போகிறோம்
இப்போது காதலி !
திராட்சைக் கொடிகள் அங்கே
தாவிப் படர்ந்திருக்கும்
பந்தல் கம்புடன் !
நீ வருவதற்கு முன்
வேனிற் காலம் வந்து விடும்
உன் படுக்கைக்குத்
தன் பசுமைக்
கொடி யோடு !

++++++++++

நமது நாடோடி முத்தங்கள்
ஞாலம் பூராவும்
உலாவித் திரிந்தன
ஆர்மீனியா, இலங்கை
யாங்சூ நதி,
பகலும் இரவும் நமது
பொறுமையைச்
சோதித்துக் கொண்டு !

+++++++++++

என்னருமைக் கண்மணி !
இப்போது
திரும்பு கிறோம்
வசந்த காலத்தை
எதிர்பார்த்து
குமுறும் கடலின் இடையே
குருட்டுப் பறவை
இரண்டு
கூட்டை நோக்கி
ஏகுவது போல் !

++++++++++++

ஏனெனில் காதல் மனம்
பயணம் செய்ய
இயலாது
ஓய்வெ டுக்காமல் !
நமது பயணங்கள்
இல்லம் நோக்கி மீளும்
கடல் பாறை களைத்
தேடும் !
நமது முத்தங்கள் திரும்பிச்
செல்லும்
தமது இல்லம் நோக்கி !

++++++++++++++

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 6, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts