பிம்பம்

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

வி பிச்சுமணி


வலசை பறவைகறளாய்
தாயகம் வந்திருக்கிறாயென
எங்க வீட்டு அடுக்களை பேச்சு
உன் கண்களை சந்திக்க
இஷ்டமிலலா
என் கண்கள் தலைகுனிந்து
வாசல் வந்தது.

உன்பிறை முதுகு
என் வீட்டு வாசலை
நோட்டமிட்டு கொண்டிருக்கிறது
சாலை பள்ள நீரில்
பிம்பமாய் பிரதிபலித்து
என்னை பரிதவிக்க வைக்கிறது

மலர்முகம் திரும்புவாயெனும்
ஏக்க பெருமூச்சில்
நீரும் ஆவியாகிவிடக்கூடும்
நீ திரும்பும் பொழுது
பள்ளத்து நீரில் விழுந்த
மிதிவண்டியால்
உன் பிம்பம் அலைஅலையாய்
அலைகழிக்கிறது

அந்த நீரில் என் பிம்பத்தை
நீ பார்த்திருக்கலாம்
பார்க்காதிருந்திருக்கலாம்
அலைஅலையாய் நான்
காணாது போயிருக்கலாம்

முந்தைய நாளில் முதன்முதலாய்
என்னை நீ பார்த்து சிரித்த போது
இதே போல் ஏதோஒரு வாகனம்
வந்து மறைத்திருந்திருக்கலாம்
மறந்திருக்க அவசியமில்லாமல்

v.pitchumani@gmail.com

Series Navigation

author

வி பிச்சுமணி

வி பிச்சுமணி

Similar Posts