அழகு

This entry is part [part not set] of 36 in the series 20090904_Issue

கு முனியசாமி


குழவியின் அழுகை
பசியினைச் சொல்லும் – வளர்
குமரியின் அழுகை
இதயத்தைக் கிள்ளும்…

இளமையின் அழுகை
வருமையைச் சொல்லும் – முது
கிழவியின் அழுகை
தனிமையைச் சொல்லும்…

நல்லவர் அழுகை
ஞாயம் சொல்லும் – நேர்
வல்லவர் அழுகை
வீரம் சொல்லும்…

கள்வர்கள் அழுகை
கபடம் சொல்லும் – பிறவி
புல்லர்கள் அழுகை
பொய்யினை வெல்லும்…

ஏழையின் அழுகை
கண்ணீர் சிந்தும் – வீழ்
கோழையின் அழுகை
வேதனை சொல்லும்…

கவிஞனின் அழுகை
காதல் சொல்லும் – நல்
நடிகனின் அழுகை
நாலும் சொல்லும்…

தங்கையின் அழுகை
தனலை மிஞ்šம் – உயிர்
அன்னையின் அழுகை
அன்பை விஞ்சும்…

கு முனியசாமி

Series Navigation

author

கு முனியசாமி

கு முனியசாமி

Similar Posts