கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -3 (மரணத்தில் எஞ்சியவை)

This entry is part [part not set] of 36 in the series 20090904_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


Fig 1
Kahlil Gibran Paintings
Les Miserables

“உனது நம்பிக்கைகள், இச்சைகளின் ஆழத்தில்தான் உனக்கு அப்பாற்பட்ட உனது மௌன அறிவும் ஒளிந்துள்ளது.”

“மனவருத்தம் மனத்தைத் தண்டிக்காது மனதில் புகைமூட்டத்தை உண்டாக்குகிறது.”

“பொறுமையாக இரு. ஏனெனில் உன் ஐயப்பாட்டிலிருந்துதான் ஞானமே பிறக்கிறது.”

கலில் கிப்ரான்

+++++++++

<< மரணத்தின் அழகு >>

கவிதை -15 பாகம் -3
(மரணத்தில் எஞ்சியவை)

பிரேத அங்கியை நீக்கி வெண்துகிலில் சுற்றி என்னை
மல்லிகை, லில்லி மலர்களால் ஆடை அணிவிப்பீர்
தந்தப் பெட்டி லிருந்து என்னுடலை எடுத்து
ஆரஞ்சுப் பூக்கள் தூவிய தலையணை மேல் கிடத்துவீர் !
அழாதீர் எனக்காக ! பாடுவீர் பூரித்து
எனதிளமைப் பருவப் பாடல்களை !
கண்ணீர் வடிக்காதீர் என்மேல் !
பருவ கால அறுவடை பற்றியும்
ஒயின் பிழியும் நுணுக்கம் பற்றியும் பாடுவீர் !
வேதனைப் பெரு மூச்சு வேண்டாம் !

++++++++++++

விரல்களால் என் முகத்தைத் தடவி உமது
பரிவையும் மகிழ்வையும் காட்டுவீர் !
கூட்டமாய்ச் சாத்திரத்தை உச்சரித்துக்
காற்றின் மௌனத்தைக் கலைக்காதீர் !
என்னோடு பாடட்டும் உம்மிதயங்கள் யாவும்
அந்த மில்லா இந்த வாழ்வின் கானத்தை !
கறுப்பாடை அணிந்து உம் துக்கத்தைக் காட்டாது
வண்ண ஆடையில் என்னோடு ஆனந்தப் படுவீர் !
என் பிரிவுக்கு இதயங்கள் பெரு மூச்சு விடாது
கண்களை மூடிக் காண்பீர் நான் உம்மோடு இருப்பதை !

+++++++++++

பூவிலைக் கொத்துக்கள் மீது வைத்து உமது
நட்பான தோள்களில் என்னுடலைச் சுமப்பீர் !
மெதுவாய் தூக்கிச் செல்வீர் ஒதுக்கிய இடு காட்டுக்கு !
நெருக்க மான புதைக் குழியில் இட்டு விடாதீர்
ஏனெனில் என் தூக்கம் கலைந்து போக
எலும்பும் மண்டை ஓடும் இரைச்சலிடும் அருகில் !
ஒன்றின் நிழலில் ஒன்று வளராத
ஊதாப்பூச் செடி வளரும் சைப்பிரஸ் காட்டுக்கு
எடுத்துச் செல்வீர் தோண்டி என்னுடல் புதைக்க !
ஆழமாய்த் தோண்டுவீர் ! புதை குழியைப் புறத்தே
ஆற்று வெள்ளம் எலும்புகளை அடித்துச் செல்லாது !
அகலமாய்த் தோண்டுவீர் ! அந்தி வேளை நிழல்கள்
அருகில் வந்து என்னோடு அமர்ந்து கொள்ள !

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 31, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts