பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 51 << மாறாத உன் தோற்றம் >>

This entry is part [part not set] of 36 in the series 20090904_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


சில்லியின் மனங்கவர் மணல்கரை நிறமோ
கௌத மாலாவின் ரியோ துல்ஸ்
முகப்பு வாசலோ உனது
தோற்றப் பண்பாட்டை எதுவும்
மாற்ற வில்லை !
கோதுமை மிதமாக்கித்
திராட்சைப் பழம் போல்
உருண்டு திரண்ட
உன் வடிவமோ, ‘கிதார்’ வாயோ
மாற வில்லை !

++++++++++

என் இதயமே ! என்னரும் இதயமே !
எல்லா மௌனத் துக்கும் முன்பு
திராட்சை கொடிகள் அரசாளும்
மேட்டு நிலங்கள் முதல்
கீழ்த்தள நஞ்சைப் புலங்கள் வரை
ஒவ்வோர் புனிதப் பீடத்திலும்
பிரதிபலிப்பது
தரணி உன்னைத்தான் !

+++++++++++

திபெத்தின் பனிப் பொழிவு கூட
போலந்தின் கற்கள் கூட
குன்றுகளின் கூசும் தாதுக் கரங்கள் கூட
ஒன்றும் மாற்ற வில்லை
உன் கோதுமைத்
தானிய வடிவத்தை !

++++++++++++

களி மண்ணோ அல்லது
கிதார் இசைக் கருவியோ
கோதுமைத் தளமோ அன்றி
சில்லியின் திராட்சைக் கனிக் கொத்தோ
தன்னிருப்பிடத்தை
உன்மூலம் மெய்ப்பித்துக் கொள்ளும் !
நாகரீக மற்ற நிலவு
தன் விருப்பைத் திணித்துக் கொண்டு
அவை யெல்லாம் தம்
உடமைகளை
உன்னிடம் பறித்துக் கொள்ளும் !

++++++++++++++

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com ((August 31, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts