பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 50 << உன்னைக் காணும் வரை >>

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


என்னரும் காதலி !
உன்னை நேசித்தற்கு முன்னே
எதுவும் சொந்த மில்லை !
ஒன்றும் மனதில் ஒட்டாமல்
புரியாமல்
உருவங்கள் ஊடே
தெருக்களில் திரிந்தேன் !
ஒரு பெயர் எதன் மீதும்
நிலைக்க வில்லை !
காற்றால் உதித்த
உலகம்
காத்தி ருந்தது எனக்கு !

++++++++++

அறைகள் பூராவும் சாம்பலென
அறிந்தவன் நான் !
நிலவு குடியிருக்கும்
குகைகளைத்
தெரிந்தவன் நான் !
குப்பைக் கிடங்குகள்
என்னைப் பார்த்துக் குலைக்கும்
“ஒழிந்து போ” எனும்
வினாக் குறிகள்
அழுத்த மாகி விடும்
மணல் தளத்தில் !

+++++++++++

எல்லாம் காலியாய்க் கிடந்தன
செத்துப் போய்
ஊமையாய்த்
தடுமாறிக் கீழே வீழ்ந்து,
ஒதுக்கப் பட்டு
உருக்குலைந்து
எண்ணிப் பார்க்க இயலாத
அந்நியமாய் !

++++++++++++

யாரோ டாவது நான்
பந்த மோடு
சொந்தமாய் இருந்தேனா ?
இல்லை !
யாரோடு மில்லை நான்
உனது அழகும்
உனது வறுமையும்
இலையுதிர் காலத்தில் பொங்கிடும்
கொடைகளாய்
என்னை
நிரப்பிடும் வரை !

++++++++++++++

தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com ((August 24, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts