கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -2 (மரணத்தின் அணைப்பு)

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


“எவனும் உனக்கு எடுத்துக் காட்ட இயலாது ஏற்கனவே (ஆழ்மனதில்) உன் அறிவுப் புலர்ந்திடப் பாதி உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு கருத்தைத் தவிர.”

“ஆர்·பலீஸ் நகரப் பொது மக்களே ! வாழ்வின் போக்கு தன் புனித முகத்தை மூடியிருக்கும் திரையை நீக்கும் போதுதான் அழகுத்துவமே (Beauty) குடிவாழ்வு ஆகிறது. ஆனால் வாழ்வும் நீவீர் ! முகத்திரையும் நீவீர் ! தன்னை நோக்கும் கண்ணாடியான அழகுத்துவம் அந்தமற்றது. ஆனால் அந்தமற்றதும் நீவீர் ! கண்ணாடியும் நீவீர் !”

கலில் கிப்ரான்

+++++++++

<< மரணத்தின் அழகு >>

கவிதை -15 பாகம் -2
(மரணத்தின் அணைப்பு)

குன்றின் ஓர் சிகரத்தைக் கடந்தேன்
கட்டுப் படாமல்
பூரண விடுதலை பெற்று
ஏறிச் சென்றிடும் என் ஆத்மா
வான் கூரை உச்சியில் !
தோழர்களே ! போய் விட்டேன்
வெகு தொலைவில்
வெகு வெகு தூரத்தில் !
குன்றுகளை மறைத்திடும்
வான் முகில்கள்
எந்தன் விழிகள் காண முடியாது !

+++++++++++

பாதாளப் பள்ளங்கள்
மூழ்கிக் கிடக்கும் மௌனக் கடலில் !
மூடி விடும் என் நினைவுச் செதில்கள்
வீடுகளையும் வீதிகளையும் !
வெண்ணிற மாயத்தின் பின்னே
புல்வெளிகளும், வயல்களும்
புலப்பட வில்லை !
வசந்த முகில்போல் தெரியும்
மஞ்சள் வண்ணத்தில்
மெழுகு வத்தியின் மங்கல் ஒளி !
அந்தி மயங்கும் மந்தாரம்
செந்நிறத்தில் தெரியும் !

+++++++++

கடல் அலைகளின் கானங்கள்
நீரோ டைகளின் பாடல்கள்
சீர்கெட்டுச் போகும் !
மௌனத்தில் அடங்கின கும்பல்
மாந்தரின் அழு குரல்கள் !
ஆதி அந்தமில்லா இசைக்கீதம் என்
காதில் விழுகிறது
சீரினிய நுட்பத்தில் !
ஆன்மா மோகிக்கும் அதை !
நான் வெண்ணிற
அங்கியால் உடல் முழுதும்
மூடப் பட்டு
இன்பத்தின் அமைதியில்
மூழ்கினேன் !

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 24, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts