பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 47 << காதலி கனல் அரங்கு >>

This entry is part [part not set] of 35 in the series 20090806_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


நினைத்துக் கொள்ளாமல் உன்னை
நேரே நோக்காமல், காதலி
எத்தனை முறை உன்னைப்
பித்துடன் நேசித்தேன் ! உனது
ஓரக் கண்ணோட் டத்தைப் புரியாது
யாரென அறியாது
தவறான இடத்தில் வளரும் செடியாகத்
தெரிந்து கொள்ளாது
பகலில் கரிந்து போனேன் ! ஆயினும்
கோதுமை மணத்தை மட்டும் விரும்பிக்
காத லித்தேன் உன்னை !

‘அங்கோல்’ நகரின் கோடை நில வொளியில்
ஒயின் கிண்ணத்தை நீ கையில் எடுக்க
ஒருவேளை கற்பனை செய் தேனோ ? அல்லது
நிழலில் நாண் கம்பிகளில் நான் வாசித்து
ஆரவாரக் கடல் போல் அலறிய கிதார்
சீரிசைக் கருவியின் இடையா நீ ?

உனை நான் காதலிப்பதை உணரா மலே
நினை நான் நேசித்தேன். முன்பு நான்
நேசித்ததை நினைவில் தேடிப் பார்த்தேன் !
முன்னை அறிந்தவன் நானுனை யாரென
கள்ளத் தனமாய்ப் பல இஇல்லங்களில் புகுந்து
களவாட நினைத்தேன் உனக்கு விருப்ப மானதை !

திடீரெனத் தொட்டேன் உன்னை
என்னருகில் நீ இருக்கும் போது !
உடனே
நின்று போன தென் நெஞ்சு !
என்கண் முன்னே
நிற்கிறாய் நீ !
தாக்கிடும் காட்டுத் தீ போல்
ஆக்கிர மித்தாய் ஆட்சிக் களத்தை
மாட்சிமை ராணி போல் !
கனல் அரங்கு உனது
ஆட்சிக் களம் !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 4, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts