கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஒரு காதலனின் அழைப்பு கவிதை -14 பாகம் -1

This entry is part [part not set] of 34 in the series 20090724_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


“மனித நேயம்தான் சுய சேமிப்பாய் நான் கொண்டுள்ளது. எந்த மனிதனும் அதை என்னிடமிருந்து நீக்க முடியாது.”

கலில் கிப்ரான்

எனது இதயத்தின் ஆழத்திலிருந்து
வான் நோக்கி
எழுந்தது ஒரு பறவை !
உயர உயரப் பறந்தது ! ஆனாலும்
பெரிது பெரிதாய் வளர்ந்தது !
தூக்கணாங் குருவியாய்த்
தோன்றிடும் முதலில் !
குயிலாய்ப் பிறகு காணும் !
கழுகாய்த் தோன்றும் பின்னால் !
வசந்த முகிலாய் விரிந்து
தாரகை நிரம்பிய
வான்வெளி முழுதும் பரவும் !
எனது இதயத்திலிருந்து வான் நோக்கி
எழுந்தது ஒரு பறவை !
பறக்கப் பறக்க அது மெழுகாய்
உருப் பெருக்கானது !
ஆயினும் அப்பறவை மெய்யாக
நீங்க வில்லை என்
நெஞ்சை விட்டு !

கலில் கிப்ரான் “தீர்க்கதரிசியின் உள்ளொளி” (Visions of the Prophet)

+++++++++

<< ஒரு காதலனின் அழைப்பு >>

கவிதை -14 பாகம் -1

என் அன்பே ! எங்கே நீ இருக்கிறாய் ?
சின்ன சொர்க்கத்தில் இருக்கிறாயா
அன்னையர் முலை நோக்கும் மதலை போல்
உன்னை நோக்கும்
மலருக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டு ?

நின் ஆத்மாவை நின் இதயத்தை அன்பளித்து
நேர்மைச் சன்னிதியை உன் மேன்மையில்
நிறுத்த உன் அரணில் நீ இருக்கிறாயா ?

அல்லது மனித ஞானத்தை நூல்களில் தேடி
ஆன்மீக ஞானம் நிறைந்து இருக்கிறாயா ?
என் ஆத்மத் துணையே ! எங்கு நீ இருக்கிறாய் ?
வழிபட்டு நிற்கி றாயா ஆலயத்தின் முன்னால் ?
கனவுகளின் புகலிடத்தில் இயற்கையை விளித்து
வனாந்திரக் களத்தில் நடமாடி வருகிறாயா ?

ஏழைகளின் குடிசையில் வசிக்கிறாயா உடைந்த
இதயத்தை இனிய ஆத்மா தேற்றிக் கொண்டு
கைநிரம்ப அளிக்கும் கொடைக ளோடு
காணும் இடமெலாம் பொங்கும் தெய்வ அருளோடு
காலத்தைக் காட்டிலும் வலுப் பெற்ற காரிகையாய் ?

நினைவிருக்கிறதா நீயும் நானும் சந்தித்த அந்த நாள் ?
அப்போதுன் ஆன்ம ஒளிவளையம் சூழ்ந்தது நம்மை
காதல் தேவதையர் நம்மருகில் மிதந்து வந்தார்
ஆத்ம வினைகளைப் புகழ்ந்து பாடிக் கொண்டு !

நினைவிருக்கிறதா நீயும் நானும் மரக்கிளையின்
நிழலில் அமர்ந்து இளைப்பாறி இருந்ததை
மனித இனத்தை விட்டு நாம் விலகி இருந்ததை
புனித ரகசியம் காயப் படாது இதயம் பாதுகாப்பதை ?

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 20, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts