பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 46 எப்போது விளக்கொளி மீளும் ?

This entry is part [part not set] of 34 in the series 20090724_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


தன் நறுமணத்தைக் காதல் மட்டுமே
என் மூலம் பரப்பினால்
வசந்தம் இனி வராமல் ஒரு கணம்
வாழ வேண்டி இருந்தால்
என்னருமைக் கண்மணி !
என்னை விட்டேகு
உன் முத்தங்களை மட்டும்
என் கன்னத்தில் இட்டு !

உன் நறுமணத்தால் நிறுத்தி விடு
ஒரு மாதத்தின் விளக்கொளியை !
உனது கூந்தல் முடியால் மூடி விடு
அனைத்துக் கதவுகளையும் !
அழுது கொண்டு நாளை நான் எழுந்தால்
ஏன் என்பதை மட்டும் மறக்காதே !
என் கனவுகளில் காணாமல் போனச்
சின்னஞ் சிறு குழந்தை நான் !

இரவின் இலைகள் ஊடே புரட்டித்
தேடினேன் உனது
கரங்களைப் பற்றிக் கொள்ள !
அமுதைப் போல் அள்ளிப்
ஆனந்தமாய்த்
தழுவிக் கொள்ள
உன்னைத் தேடினேன்
ஒளியும் நிழலும் இணைவது போல் !

ஒன்று மில்லை இருள் நிழலைத் தவிர
உன் கனவில் நீ என்னோடு
உலவி வந்த அந்த இடத்தில் !
என்னருமைக் கண்மணி !
செப்புவாய் எனக்கு
எப்போது விளக்கொளி மீளும்
என்று ?

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 20, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts