பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 45 << என் அழகீனக் காதலி ! >>

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


என் அழகீனக் காதலி !
நீயொரு
ஒழுங்கீனக் கொழுக்கட்டை !
எனதரும் அழகியே !
உனது வனப்பு
(மாசுடைய) வாயு போன்றது !
அவலட்சண மானது
உன் வாய் !
அகண்டு இரு வாய் நீளம்
கொண்டது !
எனதரும் அழகியே !
உனது முத்தங்கள்
புதிய முலாம் பழங்களைப்
போல்பவை !

அவலட்சணம் !
நீ எங்கே மறைத்துள்ளாய்
நின் கொங்கைகளை ?
சிறுத்தவை அவை !
ஈரகப்பைச் சிற்றுண்டி !
மார்பின் மேல்
கோபுரங் களாய்ப்
பூரித் தெழுந்து
நிலவிரண்டைப் போல்
இருக்க வேண்டுமென நான்
விரும்பினேன் !

அவலட்சணம் !
கடல் கூட
கொண்ட தில்லை
உன் பாத நகங்கள் போல் !
அழகு மயமாய்
பூவுக்கு மேலான ஒரு பூவாய்
தாரகைக்குச் சீரான
தாரகையாய்
அலை அலையாய் அடிக்கும்
காதல் மோகத்தில்
நின் மேனியின் ஒவ்வோர்
உறுப்பையும்
நிறுத்துப் பார்த்தேன் !

எனது அழகீனப் பெண்ணே !
உனது
பொன் இடுப்பின் மேல்
எனக்குக்
காதல் மோகம் !
என் எழில் பெண்ணே !
உன் நெற்றிச் சுருக்கம்
தருகிறது
காதல் மயக்கம் !
என்னருங் காதலியே !
காதலிக்கிறேன்
உனது
கருமை நிறத்தையும்
நினது பளிங்கு
நெஞ்சையும் !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 13, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts