கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னை விலக்கி விடு – கவிதை -13 பாகம் -1

This entry is part [part not set] of 39 in the series 20090709_Issue

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


Fig. 1
Kahlil Gibran Paintings
“I Will Get You from the Heaven”

அழகுத்துவம்* என்பது ஒருவர்
ஆத்மாவை ஈர்ப்பது !
எடுத்துக் கொள்ள விரும்பாது
ஈவதற்குக் களிப்புறுவது !

கலில் கிப்ரான் (அழகுத்துவ சிம்மாசனத்தின் முன்னே)

*(Beauty) – அழகுத்துவம்

“நேற்று இந்தக் கலியுகத்துக்கு எதிராய்ப் புகார் செய்து அஞ்சினோம் ! ஆனால் இன்றதைத் தழுவிக் கொண்டு நாம் காதலிக்கிறோம்.”

கலில் கிப்ரான்

“இன்பம் என்பது வேரைச் செழிப்பாக்கும் ஒரு கொடி, புறத்தே எழாமல் இதயத்தின் உள்ளே உருவாகி வளர்வது.”

கலில் கிப்ரான்

+++++++++

<< என்னை விலக்கி விடு >>

கவிதை -13 பாகம் -1

என்மேல் பழிசுமத்து வோனே
என்னை விலக்கிச் செல்
நம் காதலை முன்னிட்டு !
உன் ஆத்மாவும்
என் ஆத்மாவும் ஐக்கிய மாகி
ஒன்றாய் இருந்தவை
அன்னையின் பரிவு
ஆன்மாவோ டிணைந்ததை
முன்னிட்டு ! அந்தப்
பின்னலே
உன் இதயத்தை
மெய்யாக
நெய்யும் அன்போடு !
என்னை விலக்கிச் செல்
அழுகின்ற
என் இதயத் தோடு !

எந்தன் கனவுக் கடலில்
உந்திச் செல்ல வேண்டும் நான் !
பொறுத்திரு நாளை வரை
ஏனெனில் நாளைக்கு
நீ சுதந்திர மாய்ச் செய்யலாம்
நினைத்தபடி !
துளைத் தென்னை நீ
உளவு செய்வது சரி யில்லை !
அது வெறும் நிழலாய்
ஆன்மா வுடன் நடக்கும்
சமாதி நிலையை நோக்கி !
மேலும்
குளிர்ந்து போன
திண்ணிய
மண்ணுலகைக் காட்டும் !

என்னுள்ளே சிற்றிதயம் ஒன்று
இருக்கிறது !
விடுவித்துச் சிறையி லிருந்து
அவனை
வெளியே நீக்கி விட
விழைகிறேன் !
உள்ளங் கையில் நிறுத்தி
அவனை
உளவ வேண்டும் ஆழமாய்
இரகசி யத்தைக்
கறந்து வர !
இறைவன் அளித்த
தன்னம்பிக்கை என்னும்
பழி பீடத்தில்
இரகசியக் குருதியைப்
பொழியும் முன்
குறிவைத்து அம்புகளை
ஏவாதே
அவன் மீது !
இல்லையெனில் அஞ்சி
ஏகிடுவான்
கண் காணாது !
அழகுத்துவமும் காதலும்
அவனாக
மாய நளினம் அடையும்
அத்தருணம் !

எழுகிறது இளம் பரிதி !
இன்னிசை பாடுது குயில் !
நறுமணம் வீசுது
புல்லிலை
விண்வெளியில் !
விடுபட்டெழ வேண்டும்
நான் எனது
குற்ற உறக்கத்தை விட்டு !
கட்டிப் போடாதே
என்னைப்
பழிப்போனே !

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 6, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts