கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< மனிதனின் கானம் >> (முதற் பாகத் தொடர்ச்சி)கவிதை -11 பாகம் -2

This entry is part [part not set] of 36 in the series 20090618_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


Kahlil Gibran Paintings
“The Uphill Battle of Women”

“என் குறிக்கோள், என் மன நிறைவு இரண்டும் எனக்குக் கடவுள். நேற்று நான் உன்னவன், நாளைக்கு நீ என்னவன். உந்தன் மூல வேரில் இந்த பூமியிலே உதித்தவன் நான். வானத்தில் இருக்கும் என் மலர் நீ. நாம் இருவரும் ஒருங்கே பரிதியின் முன் வளர்ந்து வருகிறோம்.”

கலில் கிப்ரான். (உள்ளொளி) (Vision)

“வாழ்வுக் கோளத்தில் சீரிசைப்பாடு (Rhythm) இல்லாமல் நடுங்கும் ஒரு மனிதத் துண்டம் என்று என்னைப் பற்றி நேற்றுத்தான் சிந்தித்தேன். இப்போது அறிகிறேன் : நான்தான் அந்த வாழ்வுக் கோளம் என்று. வாழ்வு முழுவதிலும் உள்ள சீரிசைப்பாட்டுத் துண்டங்கள் யாவும் இயங்குவது என்னுள்ளேதான்.”

கலில் கிப்ரான்.

<< மனிதனின் கானம் >>
(முதற் பாகத் தொடர்ச்சி)

அற்புத வித்தைக் காரரிடம் உரை யாடினேன் !
அஸ்ஸிரியா குருக்களிடம் தர்க்கம் செய்தேன் !
பாலஸ்தீன் மதஞானியர் அறிவாழம் கண்டேன் !
மேலும் மெய்ப்பாடு தேடுகிறேன் ஆயினும் நான் !

இந்திய சாந்தத்தில் ஆத்ம ஞானம் சேமித்தேன் !
அரேபிய நாட்டின் பூர்வத்தை நான் உளவினேன் !
காதில் விழுந்த தெல்லாம் நான் செவி மடுத்தேன் !
ஆயினும் செவிடன் நான், மற்றும் ஒர் ஊமை !

கொடுங்கோல் ஆளுநரின் கடும்பிடியில் துன்புற்றேன் !
படையெடுத்த மூர்க்கருக்கு அடிமையாய் நான் உழன்றேன் !
பயங்கர ஆட்சி திணித்த பசியால் அவதி யுற்றேன் !
ஆன்ம வலு சிறிதெனக் குள்ளது ஆயினும் இன்று
அதை வைத்துப் போரிடுவேன் நான் அனுதினமும் !

நிரம்பிடும் என்மனது ! சூன்ய மாகும் என்னிதயம் !
முதுமையுறும் என்னுடல் ! குழந்தை யாகும் என்னுள்ளம் !
இளமையில் வளரும் என்னிதயம் ஒருவேளை, ஆயினும்
கிழவனாக வழிபடுவேன் ! கடவுளை மீளடைய முனைகிறேன் !
பூரணம் அடைந்திடும் அப்போதுதான் என்னிதயம் !

நானிங்கி ருக்கிறேன் ஆதி காலம் முதலே !
நானின்றும் வாழ்ந்து வருகிறேன் வையகத்தில் !
நானிங்கி ருப்பேன் உலக முடிவு வரை !
ஏனென்றால் இடர்மிக்க என்வாழ்வில் விடிவில்லை !

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 15, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts