கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மனிதனின் கானம் >> கவிதை -11 பாகம் -1

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



Kahlil Gibran Paintings
“Human Bow & Arrow”

“நேற்று அருளோடும் மகிழ்வோடும் குடிமக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஓர் அரசனைப் போல் ஆடு மேய்க்கும் இடையனாக ஆனந்தமாய் இருந்தேன் நான் ! இன்று நானறிந்த வாழ்வின் எழில் மயத்திலிருந்து என்னைக் களவாடி விட்ட வையகச் சொத்துக்களின் பிடியில் நான் மாட்டிக் கொண்ட ஓர் அடிமை !”

கலில் கிப்ரான்.

“மனித இனம் இந்த மண்ணின் பொன்னிலும் பொருளிலும் இச்சை வைக்கிறது ! ஆனால் நானோ எப்போதும் காதல் ஒளிப்பந்தம் (Torch of Love) ஒன்றைக் கையேந்தத் தேடுகிறேன் ! அது என்னைத் தீயில் குளிப்பாட்டித் தூய்மையாக்கி என் இதயத்திலிருந்து கொடிய விலங்கினத்தை அறுத்து விடும்.”

கலில் கிப்ரான்.

<< மனிதனின் கானம் >>

நானிங்கி ருக்கிறேன் ஆதிகாலம் முதலே !
நானின்னும் உயிரோ டிருக்கிறேன் இங்கே !
நானிங்கி ருப்பேன் உலக முடிவு வரை !
ஏனெனில் இடர்மிகும் என்வாழ்வில் விடிவில்லை !

எல்லை யற்ற வான் மீதுநான் திரிந்தேன் !
தொல்லை யற்ற நல்லுலகில் நானுயர்ந்தேன் !
சொர்க்கத்தின் கோட்டை வழியே நான் மிதந்தேன் !
ஆனாலும் நானிங்கு எடை போட்டால் சிறைக் கைதி !

கன்பூசியஸ் சொற் பொழிவை நான் கேட்டேன் !
களஞ்சியப் பிரம்ம ஞானத்தைச் செவி மடுத்தேன் !
புத்தரோடு அமர்ந்தேன் போதி மரத் தடியில் !
ஆயினும் நானிங்கு அறிவிலா மதத் துரோகி !

ஜெகோவா மோசஸ் சந்தித்த செனாய் மேல் ஏறினேன் !
ஜார்டனில் நாஸரீன் செய்த விந்தைகள் கண்டேன் !
மகமது நபி வந்த போது மடினாவில் நான் இருந்தேன் !
ஆயினும் நானிங்கு குழம்பிய ஒரு சிறைக் கைதி !

பாபிலோன் வல்லமைக்குச் சாட்சியாய் இருந்தேன் !
எகிப்தின் பெரும்புகழை நான் படித் தறிந்தேன் !
ரோமாபுரி போர்த் திறனை நான் வியந்தேன் !
ஆயினும் சாதனைகள் ஈனும் ஆறாத் துயர்களை
ஆரம்பப் போதனைகள் எனக்கு விளக்கிக் காட்டும் !

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 8, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts