பாப்லோ நெருடாவின் கவிதைகள் -40 << யுத்த வீரன் காதலி >>

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



யுத்தப் போக்கின் மத்தியிலே
வாழ்க்கை
வழிநடத்திச் செல்லும்
உன்னை யொரு
யுத்த வீரன்
காதலியாய் !

பழைய உனது
பாட்டாடை யோடு
பகட்டு நகை யோடு
நெருப்பு மேல்
நடந்து செல்ல நீ
தெரிந்தெடுக்கப் பட்டாய் !

வா இங்கு ! தெருச் சுற்றியே !
வந்தென் மார்பு மேல்
படிந்துள்ள
செந்நிறத்துப்
பனித்துளிகளைப்
பருகிடு !

எங்கு சென்றாய்
என்றுனக்குத்
தெரிய வில்லை !
நடனத் துணை மாதுனக்கு
இப்போது
நாடில்லை !
நடனக் குழு வில்லை !

அருகில் நீ என்னோடு
வருகிறாய் !
என்னோடு உன் வாழ்வு
இணைந் துள்ளது !
ஆனால் நம்
இருவர் பின் தொடர்கிறது
மரணம் !

பட்டாடை யோடு
இப்போது நீ
நடன அரங்குகளில்
நடன மாட
முடியாது இனிமேல் !

உன் காலணிகள் தேய்ந்து
ஓய்ந்து போயின !
ஆயினும் நீ
அணிவகுப்பு
நடையில்
உயர்ந்து போகிறாய் !

நடக்க வேண்டும் நீ
முட்கள் மீது
இரத்தச்
சொட்டுக்கள் தரையில்
விட்டுச் சிந்திட !

என் கண்மணி !
எனக்கு
முத்தம் கொடு !
சுத்தம் செய்
அந்தப்
பீரங்கியை !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 9, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts