கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதலில் ஏகாந்தம் >> கவிதை -10 பாகம் -2

This entry is part [part not set] of 27 in the series 20090604_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா




Kahlil Gibran Paintings
“Les Miserables”

“எனது உயிர்வாழ்வு மலர்ச்சியில் காதல் முடிவு நிகழ் காலத்தை கடந்த காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் இணைப்பாக்கி உள்ளது.”

கலில் கிப்ரான்.

காதலைப் பற்றிப் பேச வரும் போது புனிதக் கனலில் வாயிதழ்களைத் தூயப் படுத்தினேன். ஆனால் வாயைத் திறந்து பேசப் போனால் வாய் அடைத்துக் கொண்டது.”

கலில் கிப்ரான்.

<< காதலில் ஏகாந்தம் >>

காதல் ஆசீர்வதித்துக்
கடவுள் மதிப்பளிக்கும் என்
ஆத்மா
அடிமை ஆக்கும்
என் இதயத்தைக்
கைப்பற் றியவள் நீ !
நேற்றுக் கவலை யின்றி
இருந்தேன்
இந்த மண்ணில்
அமைதி யாக வாழ்ந்து !
ஆயினும்
இப்போது நான் இதய மின்றி
அடைப் பட்டுப் போன
சிறைக் கைதி !

என் எழில் அரசி !
நான் இவ்வுலகில் பிறந்தது
ஏனென்று அறிந்து கொண்டேன்
நானுனை அடைந்த போது !
நீ ஓர் இளவரசி என்று நான்
கண்டுபிடித்த வேளை
என் ஏழ்மையை நோக்கினேன் !
ஆன்மாவை
இரகசியமாய் வழிநடத்திக்
காதல் உணர்வானது
காசினி வழக்கங்களை
மறந்து விடும் இடத்தில்
மனிதனுக்குத் தெரியாமல்
ஓர் இரகசியத்தைக்
கடவுள் வைத்துள்ளது என்று நான்
கற்றுக் கொண்டேன் !
உற்று நானுன் கண்களை
நோக்கிய போது
இப்பாதை இதயத்தின்
சொர்க்க புரிக்கு வாசலுக்கு
வழி திறக்கு மென்று
நான் அறிவேன் !

நீ யிருக்கும் உச்ச நிலைக்கு
நானிருக்கும் துச்சை நிலைக்கு
ஒப்பிட்டால்
பூதமும் புழுவும்
போராட் டத்தில் ஒருங்கே
பூட்டப் பட்டுள்ளதைக் கண்டு
இந்தப் பூமி
எனக்குத் தாயக மில்லை
என்று நான் உணர்கிறேன் !

கன்னியர் நேற்று உன்னைச்
சூழ்ந்திருக்கக் கண்டேன்
ரோஜாவைச் சுற்றிய
பசுமைச் செடி கொடி போல !
எனது கனவுக் காட்சிகளின்
உள்ளொளி
இறங்கி வந்தது
சொர்க்க புரியிலிருந்து
என்னை நோக்கி !
உன் பிதாவின் பெரும் புகழை நான்
எண்ணிடும் வேளை
ரோஜாவைப் பறித்த
எந்தன் கைகள்
சிந்திடும் இரத்தம்
ஒளிந்த முட்கள் குத்தி !
என் கனவுகள் சேமித்தவை
இழந்து போயின
விழித்தெழும் வேளை !

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 2, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts