பாப்லோ நெருடாவின் கவிதைகள் -39 உன் விழிகள் என் கொடி உயர்த்தும்

This entry is part [part not set] of 27 in the series 20090604_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



என்னைத் தவிர மிகுதியாய்
வேறு எவரும்
விரும்பு வதில்லை
உன் கண்ணிமைகள்
தலையணை மீதிருந்து
உலகை எனக்குத் தெரியாமல்
மூடி இருப்பதை !
அங்கும்
உனது இனிய நெருக்கத்தில்
எனது இரத்தம்
உன்னோடு பள்ளி கொள்ள
விடுவிப்பேன்
என்னை நானே !

எழுவாய் !
எழுந்து நிற்பாய் !
என்னோ டிணைந் தெழுவாய் !
இருவரும் செல்வோம்
இணைவாய் !
எதிர்த்துப் பேய்க் குழுவோடு
போரிடுவோம்
நேருக்கு நேராய் !
பசிக்கு பாதை அமைக்கும்
ஏற்பாட்டுக் கெதிராய்,
அதிகார வர்க்கத்தின்
துன்பச்
சதிகளுக் கெதிராய் !

வாராய் ! இருவரும் செல்வோம் !
தாரகை நீ எனக்கு !
வாராய் என்னுடன் !
புதிதாய் ஒரே மண்ணில்
உதித்தவள் நீ !
ஒளிந்திருக்கும் ஊற்றினை
நெருப்புக்கு இடையே நீ
தெரிந்தி ருப்பவள் !
அருகிலே நீ இருக்கும் வேளை
உனது வீர விழிகள்
உயர்த்தும் என் கொடியை !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 2, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts