பாப்லோ நெருடாவின் கவிதைகள் -37 << வறுமையும் சொத்தும் >>

This entry is part [part not set] of 24 in the series 20090521_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


அந்தோ வேண்டாம் உனக்கு
நீ அஞ்சிடும்
வறுமைப் பிணி !
அறுந்த செருப்புடன்
கடைத் தெருவுக்கு நீ போக
வேண்டாம் !
மீண்டும் இங்கு வா
உந்தன் பழைய
உடையோடு !

என்னரும் காதலி !
இன்னலோடு
நாம் வாழச் செல்வந்தர்
நாடுவது போல்
நமக்குள் பாசப் பிடிப்பில்லை !
இதுவரை
மானிட இதயத்தைக் கடித்த
வறுமையை
வேண்டாத பல்லைப் போல்
தோண்டி எடுப்போம் !

அதற்கு நீ அஞ்சுவதை நான்
விரும்ப வில்லை !
என் தவறால்
வறுமை
உன் குடிசைக்குள் புகுந்து விட்டால்
வறுமை உன்
பொன் காலணியை
நீக்கி விட்டால்
உன் புன்னகை மட்டும்
நீங்காமல்
பார்த்துக் கொள் !
அது என் உயிர் வாழ்வுக்கு
ஓர் உணவு !

உன்னால்
வீட்டுக்கு வாடகை தராமல்
போனாலும்
வேலைக்குப் போ வழக்கம் போல்
செருக்கு நடையோடு !
நினைவில் வைத்துக் கொள்
உனை நான்
கண்கா ணித்து வருவதாக !
என்னரும் காதலி !
இப்புவியில் என்றென்றும்
நாமிருவரும் தான்
சேமிக்கப்பட்ட
மாபெரும் சொத்து !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 18, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts