கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< மனித விதிக்கூண்டில் சிறை >> கவிதை -9

This entry is part [part not set] of 24 in the series 20090521_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாFig. 1
Kahlil Gibran’s Paintings
“The Divine World”

“நீ வாய் திறந்து பேசுவாய், உன் சிந்தனையோடு நீ அமைதி அடையாத போது ! நீ வாய் இதழ்களோடு பொழுதுபோக்காக வாழ்வாய்த் திசைமாறி, உன் இதயத்தோடு நீ தனிக் குடித்தனம் நடத்த முடியாத போது !”

கலில் கிப்ரான்.

“உன்னகத்தே உள்ள கால வரம்பில்லாமை வாழ்வின் கால எல்லையற்ற தன்மையை உணர்ந்திடும் ! அது அறிவது : நேற்றென்பது இன்றை தின நினைவின்றி வேறில்லை ! நாளை என்பது இன்றைய தினக் கனவின்றி வேறில்லை !”

கலில் கிப்ரான்.

“தோல்வி ! என் படுதோல்வி ! மரணமற்ற மன உறுதி ! நீயும் நானும் புயலோடு சேர்ந்து கொண்டு நகைப்வோம் ! இருவரும் சேர்ந்து நமக்குள் மரித்துப் போனவைக்குப் புதை குழிகளைத் தோண்டுவோம் ! சூரிய வெய்யிலில் நாம் உறுதியுடன் நிற்போம் ! அபாய மனிதராய் நாம் ஆகிவிடுவோம்.”

கலில் கிப்ரான்.

<< மனித விதிக்கூண்டில் சிறை >>

எழி மயத்தின் அரங்கிலே
வாழ்க்கை
நதிப் போக்கின் வரம்பிலே
மானிடத்தின்
விதிக் கூண்டிலே
கைதி யாக உள்ளேன் !
ஆக்கப் படைப்பின் நடுவில்
அழகு மயத்திலே
விலக்கப் பட்டு
மரணம் அடைந்தேன்.
காரணம்
கடவுள் அளித்த
கொடைகளை
அனுபவிக்க நான்
தடைசெயப் பட்டதால் !

எல்லா வித எழில் மயங்களும்
எனக்குள் தூண்டும்
காதலையும் மோகத்தையும்
இழிவாகக் கருதுவது
மனிதனின் கோட்பாடு !
நான் இச்சையுறும் ஒவ்வொரு
நல்வினையும்
உன்னத மில்லை
என்பது
மனிதனின் நியாயப்பாடு !

புவி அடக்கச் சங்கிலியால்
கட்டப் பட்டு,
மரித்துப் போய்,
நாக்கு முடியப் பட்டு
சூனிய விழிகளில்
கண்ணீர்த் துளிகளோடு
சிரிக்கும்
மனித இனத்தால்
மறக்கப் பட்டு
மனித இதயம் இழக்கப் பட்டு
மானிடக் கட்டளையில்
சிறைப் பட்டேன்
துர்நாற்றக்
குகைக் குள்ளே !

குருதி இழையாய் ஓடும்
காயப் பட்ட
அந்த இதயத்திலே
இந்த வார்த்தைகள் வெளிவரக்
கேட்டேன் !
மிகையாகச் சொல்லினும்
என் ஈர விழிகள்
காட்சியைத் தடுத்தன !
வருந்தி அலறிடும் ஆத்மா
கேட்பது
நிறுத்தம் ஆனது !

மன ஒளி (From the Article Vision)

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 18, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts