பாப்லோ நெருடாவின் கவிதைகள் -34 << காதல் பெண்டிர் >>

This entry is part [part not set] of 24 in the series 20090430_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


பெண்டிரே !
மாபெரும் காதலில் மயங்கி
மாயக் காதல் தேடிப்
போகும்
மங்கையரே
என்ன நேர்ந்தது ?

ஒரு வேளை காலமா ?
காலத்துக்கு நீ
காத்தி ருக்கிறாயா ?

காரணத்தை இப்போது
காணலாம் இங்கு !
சொர்க்கத்தின்
வசீகரக் கற்களைக்
கவர்ந்து கொண்டு
கடந்து செல்வதை நோக்கு
பூக்களையும்
புற்களையும் அழித்துக் கொண்டு,
நுரை அரவ மோடு,
ஆண் விந்தும்
மல்லிகைப் பூ மணத்தோடு
குருதி கசியும்
நிலவுடன் !

இப்போது நீ
குள்ளப் பாதத்தை
நீரில் இட்டு
உள்ளத்தில் விரும்பி
என்ன செய்வதென
ஒன்றும் புரியாது
நிற்கிறாய் !

சில இராப் பயணங்கள்
நலம் அளிப்பவை !
சில வாகனப் பெட்டிகள்
செம்மை யானவை !
உலாவிச் செல்லும்
சில மகிழ்வு நடைப் பயணங்கள்
சிறந்தவை !
பெருத்த விளைவுகள்
இல்லாத
சில நடனங்கள்
தொடர்வதைத் தவிர
தடை ஏது மில்லை !

பயத்துக்கு மடிவதை
அல்லது
குளிருக்குத் தயங்குவதை
அல்லது
ஐயத்தால் மரிப்பதை
உனது நெஞ்சுக் குள்ளோ
உனக்கு அப்பாலோ
கண்டுபிடித்து விடுவேன்
நீண்ட நடை
கொண்ட நான் !
அடையாளம் கண்டு விடுவாள்
அவளும் என்னை !
காதலைக் கண்டு
நடுங்காமல்
மோகத்தில் பிணைந்து
பிறப்பிலும் இறப்பிலும்
பின்னிக் கொள்வாள்
என்னோடு !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 27, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts