தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
ஒன்றை நீ அறிந்து கொள்ள
வேண்டு மென்று
நான் விரும்புகிறேன் !
இது எப்படி என்று
தெரியும் உனக்கு !
பலகணி வழியே
செந்நிறக் கிளை ஊடே தெரியும்
இலை உதிர் காலத்துப்
பளிங்கு நிலவை நான்
பார்த்திடும் போதும்,
நெருப்பின் அருகில்
கரத்தை வைக்கும் போதும்
ஆறிப் போன சாம்பலும்
முறிந்த மோன
மரக் கட்டையும்
என்னை ஏந்திச் செல்லும்
உன்னிடம் !
நறுமணம், சுடரொளி,
உலோகம் போல்
உலகில் நிலவிய ஒவ்வொன்றும்
சிறிய படகுகளாய்
உனது தீவை நோக்கிச் சென்று
எனக்குக் காத்திருக்கும் !
நீ இப்போது என்னை
நேசிக்காது
சிறிது சிறிதாய்
நிறுத்திக் கொண்டால்
நானும்
சிறிது சிறிதாய்
நிறுத்தி விடுவேன்
உன்னை
நேசிப்பதையும் !
திடீரென என்னை நீ
மறந்து போனால்
தேடி வராதே
என்னைத்
திரும்பக் காண்பதற்கு !
ஏனென்றால்
நான் உன்னை
ஏற்கனவே
மறந்து விட்டேன் !
என் வேர்கள் முளைத்துள்ள
கடற் கரையிலே
என்னை விட்டு நீ
விலகிச் செல்ல
முடிவு செய்தால்,
அன்றைய தினத்தில்
பித்துடன்
ஆழ்ந்து நீ சிந்தித்தால்
என் வாழ்வில் எதிர்ப்படும்
சினப் புயலை
நினைவில் வைத்துக் கொள்
அந்த மணி நேரத்தில்
எந்தன் கரங்களை
உயர்த்த வேண்டும் நான் !
எந்தன் வேர்கள்
அடுத்த தேசத்தை நோக்கிப்
பயணம் செல்லும் !
ஒவ்வொரு தினமும்
ஒவ்வொரு மணிப் பொழுதிலும்
எனக்குரியவள் நீ யென
இனிமை யோடு
உணர்வா யானால்,
அனுதினமும் மலரொன்று
உனது உதடுகள் மேல்
ஏறிச் சென்று
என்னைத் தேடுமானால்,
எனக்குரியவளே !
என் நேசகி !
கனற் பொறிகள் யாவும்
மீண்டெழும் எனக்கு !
எதுவும் அணையாது, மறக்காது
என் காதலி !
உன் காதலே
என் காதற் பசி ஆற்றும்
நீ வாழும் வரை !
நிரந்தரமாய் இருக்கும்
உன் கைகளுக் குள்ளே
என் கைகள்
பின்னிக் கொண்டு !
(தொடரும்)
***************************
தகவல் :
1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.
2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA
3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia
***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 13, 2009)]
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! நாசா செவ்வாய்க் கோள் காலநிலை அறியும் விண்ணுளவித் தேர்ந்தெடுப்பு !(கட்டுரை 56 பாகம் -3)
- படைப்பாளுமைகள் சி. மணி, அப்பாஸ் நினைவு
- அசோகமித்திரன் 77: தொகுப்பு: சுப்ரபாரதிமணியன்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< வாழ்க்கையின் விளையாட்டுக் களம் >> கவிதை -5 பாகம் -2
- தொலைந்த செடிகளின் புன்னகை
- எதைச் சொல்வீர்கள்?…
- ஒத்திவைக்கப்பட்ட சப்தங்கள்….
- அழகியநெருடல்
- நிழற்படங்கள்
- சங்கச் சுரங்கம் – 10 : பெரும்பாணாற்றுப் படை
- நாகூர் – ஒரு வேடிக்கை உலகம்
- தமிழ்ப் புத்தாண்டு சித்திரை ஒன்று தான், தை ஒன்றாக இருக்கமுடியாது என்று திரு இரா.குரு.ராகவேந்திரன்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -32 << காதல் ஊடல்கள் ! >>
- பாடுக மனமே
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -6 (இறுதிக் காட்சி)
- எதிர்வீட்டு தேவதை
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தொன்று
- காட்சி
- சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் – 1
- சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்ற கற்பிதங்களும் – 2
- காதலைத் தேடும் பெண்
- வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்
- நினைவுகளின் தடத்தில் – (29)
- தேடும் என் தோழா
- நரகம்
- தழும்பு வலிக்கிறது