பாப்லோ நெருடாவின் கவிதைகள் -31 << என் கனவு ! >>

This entry is part [part not set] of 28 in the series 20090409_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



கடல் மணல் மீது நான்
நடந்த போது
உன்னை விட்டு விலகத்
தீர்மானித்தேன் !

நடுங்கி வந்த
கருங் களிமண் மேல்
கால் தடம் பதித்தேன் !
களிமண் ணுக்குள்
கால்கள் முங்கியும்
மேல் எழுந்திடும் போது
உறுதி செய்கிறேன் :
என்னி லிருந்து நீங்கி நீ
வெளிவர வேண்டும் என்று !
பளுப் பாறையாய்
அழுத்தி
என்னைக் கீழே
அமுக்கிக் கொண்டிருக்கிறாய் !
உன் வேரைப் பிடுங்கிக்
காற்றில்
பறக்க விட்டு
படிப் படியாய்
உன்னை இழந்து போவதால்
என்ன நஷ்டம்
ஆகும் என்று
எண்ணிப் பார்க்கிறேன் !

ஆகா ! என் கண்மணி !
ஒரு கணத்தில்
கனவு ஒன்று
கொடூர இறக்கை யோடு
போர்த்திக்
கொண்டுள்ளது
உன்னை !

உணர்ந்து கொண்டாய் நீயே
உன்னைக் களிமண்
விழுங்கிக் கொள்வதாய் !
உடனே நீ
விளித்தாய் என்னை !
ஆயினும்
விரைந்திட வில்லை நான் !
எதிர்ப்பின்றி நீயே
அசைவின்றிப்
புதைந்து கொண்டிருந்தாய்
புதைமண்ணில்
மூச்சு முட்டி !

என் முடிவு பிறகு
வெறுப் போடு
எதிர்கொண்டது
உன் கனவை,
உதிரும் நம் இதயங்களின்
முறிவுகளை !
மீண்டெ ழுந்தோம் இருவரும்
தூய காதலராய்
நிர்வாணத்தில்
கனவின்றி,
களிமண் ணின்றி
கதிரொளி முழுதாய் வீசிக்
கனல் நம்மைக்
கவச மாக்கி !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 6, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts