பாப்லோ நெருடாவின் கவிதைகள் -30 << வீணாக்குபவள் நீ ! >>

This entry is part [part not set] of 39 in the series 20090402_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


உன்னைத்தான் தேர்ந்தெடுத்தேன்
எல்லாப் பெண்டிருக்குள்ளே
இந்தப் பூமியில் !
நடன மிடும் என் இதயம்
நாட்டிய அணியோடு
அல்லது
போராட்டம் புரியும்
தேவை யான போது
திசை தெரியாது !

என் மகன் எங்கே
என்றுன்னைக் கேட்டேன் ?
என்னை உணர்ந்து கொண்டு
எனக்குள்ளே சொல்லிக் கொண்டு
உன்னுடைய
கருவுக் குள்ளே
எதிர்பார்க்க வில்லையா
என்னை நானே ?
என் மகனை
எனக்குத் திருப்பிக் கொடு !

இன்பக் கதவுகளுக் கு:ள்ளே
மறந்து விட்டாயா
மகனை ?
பகைத்து வீணாக்குபவளே !
சந்திக்கும்
இந்த இடத்துக்குப்
பந்த பாசமோடு
வந்திருப்பதை நீ
மறந்து போனாயா ?
நாமிருவரும் இணைந்து
அவன் வாய் மூலம்
எனது காதலைச் சொல்லியதை
மறந்து போனாயா ?
நமக்குள்ளே
ஒருவரிடம் ஒருவர்
உரைக்க முடியாமல் போனது
ஒவ்வொன்றும்
உனக்கு
நினைவில் உள்ளதா ?

நெருப்பும் குருதியும்
கலந்த அலையி லிருந்து
மீட்டுன்னை நான்
மேலே
தூக்கும் போது
இரட்டிப் பானது வாழ்க்கை
நமக்கிடையே !
எவரும் நம்மோடு
இதுவரை உரையாட வில்லை !
ஒருவர் நம்முடன் உரையாட
வரும் போது
பதில் பேசாது போனால்
தனித்து விடப் படுவோம்
பயந்த கோழைகளாய் நாம்
தவிர்க்கும்
இந்த வாழ்விலே !

வாழ்வை வீணாக்கு பவளே !
வாசற் கதவைத் திற !
உன் இதயத்தில்
உள்ள முடிச்சை அவிழ்த்துப்
பறந்து போ
இந்தப் பூமி வழியே
என் குருதியும் உன் குருதியும்
எடுத்துக் கொண்டு !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 30, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts