பாப்லோ நெருடாவின் கவிதைகள் -28 << உன்னைப் புண்படுத்தினேன் ! >>

This entry is part [part not set] of 28 in the series 20090319_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



புண்படுத்தி விட்டேன் உன்னை
என் கண்மணி !
துன்புறுத்தி விட்டேன் கிழித்து
உன் ஆத்மாவை !

புரிந்து கொள்
என்னைச் சரியாய் !
அறிவார் என்னை
ஒவ்வொரு நபரும்
நன்றாய் !
“நான்” என்னும் தனித்துவமும்
நான் உனது
நாயகன் என்னும்
நேயமும் சேர்ந்திருக்கும் !

என் நடத்தை தடுமாறிப் போனது
உன்னிடம் !
ஏறி இறங்கும்
எனது மோகத் தீ !
எல்லாப் பிராணிகள் போல
என்னைப் பலவீனனாய்க்
காண்பது
உன் உரிமைப் பாடு !
உணவு பண்ணி
இசைக் கருவி மீட்டும்
உன் மெல்லிய கரங்கள்
தடுக்க வேண்டும்
என்னை
இதயம் சண்டைக்கு
ஏகும் போது !

ஆதலால் நான் நாடுகிறேன்
நிலைத்த
சிலையாக உன்னை !
உன் குருதியில் நனைந்து
என் இரும்புக் கரங்கள்
உறுதியை தேடு கின்றன
உன்னிடம் !
உனது ஆழ்ந்த சிந்தனை
எனக்குத் தேவை !
உனது வெண்கலச் சிரிப்பு
எனக்குக் கேட்டால்,
எனது கடூர நடத்தைக்குக்
காரணம்
ஏது மில்லை என்றால்,
ஏற்றுக் கொள் நீ
போற்றத் தகுந்தவளே !
எனது துயரத்தை
என் சினத்தை !
மன்னித்திடு
உன்னை மெல்ல அழிக்கும்
என் பகையாளிக் கைகளை !
களிமண்ணில் உருவாகி
வெளியே வருவாய் எனது
போராட்டங் களுக்காக
புதுப்பித் துன்னை !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 16, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts