கலில் கிப்ரான் கவிதைகள் << அலைகளின் கீதங்கள் >> கவிதை -3 (பாகம் -1)

This entry is part [part not set] of 37 in the series 20090312_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


முடிவில்லா நீடிப்புள்ள ஆத்மா பூர்த்தி பெறுவதில்லை ! அது பூரணத்தைத் தேடி எப்போதும் செல்கிறது ! பிறகு என்னிதயம் எழில்மய வாழ்வை நோக்கிக் கேட்கிறது : “நீயே எல்லா ஞானக் களஞ்சியம் ! பெண்ணின் மர்மத்தை எனக்குத் தெளிவு செய் !” அது பதில் அளித்தது. “ஓ மனித இதயமே ! பெண் என்பவள் உனது மனப் பிரதிபலிப்பே ! நீ எப்படி உள்ளாயோ அவள் அப்படி இருக்கிறாள் ! எங்கெல்லாம் நீ வசிக்கிறாயோ அங்கெல்லாம் அவள் வாழ்கிறாள் ! அறிவில்லாதவர் விளக்காத மதத்தைப் போன்றவள் அவள் ! முகில் மறைக்காத ஒரு நிலவைப் போன்றவள் ! மாசில்லாத் தென்றலைப் போன்றவள் !”

கலில் கிப்ரான் (The House of Fortune) (Tears & Laughter)

Fig. 1
Kahlil Gibran’s Paintings
My Sweetheart

“அனுதினம் நீ வாழும் வாழ்க்கையே உனது ஆலயம் ! உனது மதம் !

கலில் கிப்ரான் (1883-1931)

“துயர்களை ஒருபோதும் நேராக நோக்காதவன், மகிழ்ச்சியை அடையத் தகுதி பெறாதவன்.”

கலில் கிப்ரான் (கண்ணீரும் சிரிப்பும்)

“எல்லையற்ற இந்தப் பிரபஞ்சத்தின் மேற்தளக் காற்றில் பறந்து நான் கற்பனை உலகில் மிதந்தேன் ! ஆங்கே தெய்வீக ஒளிவீசும் வட்டாரத்தோடு நெருங்கி இருந்தேன் ! இங்கே நான் பொருளாயுதச் சிறையில் கிடக்கிறேன் !

கலில் கிப்ரான்

<< அலையின் கீதங்கள் >>

உறுதியுள்ள கடற்கரை என்னரும் நாயகன் !
நானவள் ஆசை நாயகி !
இறுதியில் இருவரும் இணைந்தோம் காதலால் !
நிலவென்னை இழுக்கும் அவனிடமிருந்து !
நெருங்கிப் பிறகு பிரிவேன்
வெறுப்புடன் பிரியா விடை
பெறுவேன் சிறிது சிறிதாய் !

விண்ணீலத் தொடுவானின்
பின்புறம் ஒளிந்து விரைவேன்
என்னுடை வெண்ணிற நுரைகள் அவன்
பொன்னிற மணல்மேல் தெளிக்கும் !
பின்னிக் கலப்போம் ஒன்றாய்
உருகிக் குவிந்த சுடர் ஒளியில் !

அலைகளின் தாகத்தைத் தணித்து
அதனுடை மோகத்தைத் தீர்ப்பேன் !
எனது குரல் ஒலி மிதமாகும்
எனது கோபம் அடங்கிப் போகும் !
பொழுது வெளுத்ததும் காதல் விதிகளைப்
பூஜித் திடுவேன் அவன் காதில் !
தழுவிடு வான் அவன் என்னை
நீடித்த இச்சை யோடு !

மாலையில் நம்பிக்கைக் கீதம் இசைப்பேன்
மெல்லிய முத்தம் அவனுக்கு முத்திரையாய்
முகத்தில் இட்டுப் பயந்து நகர்வேன் !
அமைதியாய் பொறுமையில் அவனோ
சிந்தித் திடுவான் ! என் சீற்றத் துக்கு
அடைக்கலம் தரும் அவன் பரந்த மார்பு !

அலைகள் மீளும் போது நாமிருவர்
தழுவிக் கொள்வோம் ஒருவரை ஒருவர் !
அலைகள் நீங்கும் போது அவன் கால்
அடியில் வீழ்வேன் நான் பூஜித்து !

++++++++++++++

(தொடரும்)

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 9, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts