பாப்லோ நெருடாவின் கவிதைகள் -26 << காதல் ஒரு பயணம் >>

This entry is part [part not set] of 32 in the series 20090305_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகாதல் ஒரு பயணம்
கடலோடு விண்மீனோடு
மூச்சு முட்டும் வாயு வோடு
சூறாவளித் தூசி யோடு
பின்னிய
மின்னல் அடிப்புக்கள் தான்
காதற் பயணம் !
ஈர் உடல்களை இளகச் செய்யும்
ஒற்றைத் தேன் அமுது !

முத்தம் முத்தமாய் ஈந்து
பயணம் செய்கிறேன்
முடிவில்லா
உன் சிற்றுலகில்
உனது வேலிகளில்
உனது நதிகளில்
உனது சிற்றூர்களில்
உனது ஜனன
உறுப்புக் கனல் சுவையில்
ஊறிப் போய்
மாறிப் போய் !

++++++++++++++++

<< நானின்றி நீ மடிவாய் >>

மறுபடியும் உன்கால் பாதம் எனைக்
புறக்கணித்துச் சென்றால்
அப்பாதம்
அறுத்து விடப்படும் துண்டாய் !

வேறு பாதைக்கு உன்கை உன்னை
இழுத்துச் சென்றால்
அந்தக் கை
அழுகிப் போய்விடும் வீணாய் !

என்னிட மிருந்து உன் வாழ்வை
முறித்துக் கொண்டால்
மரணமே உனக்கு
உயிருடன் நீ வாழ்ந் தாலும் !

நீடித்த மரணத்தில் கிடப்பாய் !
நீ அல்லது
நிழலாய் நகர்வாய்
நானில் லாத இந்தப் பூமியில் !

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 2, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts