பாப்லோ நெருடாவின் கவிதைகள் -22 << அழகி ஒரு பெண் நெருப்பு ! >>

This entry is part [part not set] of 34 in the series 20090205_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


இசைபோல் செடிபோல்
இந்த அழகி
மென்மை யானவள் !
வைரம், பஞ்சு, கோதுமை,
பீச் கனி வழியாக
ஒளி ஊடுருவி உருவாக்கிய
ஓர் உயிர்ச் சிலை அவள் !
இப்போது அனுப்புகிறாள்
வெளியே
அலைகளின் மீது
அவளது
புதிய நறுமணத்தை !

வெய்யில் பதம் படுத்திய அவள்
பாதத் தடங்களை
மணலில் அச்செடுத்துக்
காட்டும்
கடல் அலை நீரடிப்பு !
இப்போ தவள்
பெண் நெருப்பில் மலர்ந்த
ஒரு ரோஜா !
உதய சூரியனைக் கடலைப்
பந்தயத்தில் எதிர்க்கும்
ஒரு நீர்க் குமிழி !

ஏதொன்றும் தொடுவ தில்லை
உன்னை
குளிர்ந்த உப்பினைத் தவிர !
தொடர்ந்து வரும் வசந்த
காலத்தைக்
காதலும் பாதிக்காது !
முடிவில் லாத கடல் நுரை
எதிரொலிக்கும்
வனப்பு மங்கை அவள் !
உனது சிற்ப இடுப்பானது
அன்னத் துக்கும்
மல்லிகை மலருக்கும்
புத்தளவை உண்டாக்கும்
உன் உடற் கட்டுப்
பளிங்கு நீரிலே
மிதக்கும் போது

(தொடரும்)

***************************
தகவல் :

1. 100 Love Sonnets By : Pablo Neruda
English Translation from Spanish By : Stephen Tapscott (1986)
University of Texas Press
Sixteenth Paperback Printing (2004)
Box : 7819, Austin Texas, 78713-7819, USA.

2. The Captain’s Verses By : Pablo Neruda (1972)
English Translation from Spanish By : Donald D. Walsh (1972)
New Directions of publishing Corporation
80 Eighth Avenue, New York 10011, USA

3. Pablo Neruda From Wikipedia, the free encyclopedia

***************************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (February 2, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts