கலில் கிப்ரான் கவிதைகள்: என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே !-கவிதை -1

This entry is part [part not set] of 36 in the series 20090129_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


ஒற்றை இதயத்தால்
நான் இப்போது
உரைப்பவை எல்லாம்
நாளை ஆயிரம் இதயங்கள்
சொல்லும் !

கலில் கிப்ரான் (1883-1931)

“கலில் கிப்ரான் ஆற்றல் அவரது ஆன்மீக வாழ்க்கையின் உன்னதக் களஞ்சியத்திலிருந்து ஊறி வந்தது. இல்லாவிட்டால் அவர் சுயமாக உண்டாக்கியவை எல்லாம் அத்துணை உலக மயமாக, மகத்துவமாக, அழகு மொழி மூலம் ஆடை போர்த்திய படைப்புக்களாய் அமைந்திருக்க முடியாது.”

கிளாடி பிராக்டன் (Claude Bragdon)

“மனித இதயம் உதவி நாடிக் கூக்குரல் இடுகிறது. மனித ஆத்மா விடுதலை கேட்டு மன்றாடுகிறது. ஆனால் நாம் அந்தக் கூக்குரல்களைக் கவனிப்ப தில்லை ! காதில் கேட்பதில்லை ! புரிந்து கொள்வது மில்லை ! ஆனால் அவற்றைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் ஒருவனைப் பைத்தியம் என்று சொல்லி நாம் அவனை விட்டு ஓடுகிறோம்.”.

கலில் கிப்ரான்.

கடவுளின் படைப்பு :

கடவுள் தன்னிடமிருந்து ஆன்மாவைப் பிரித்து அதை ஓர் அழகிய தேவதையாக ஆக்கினார். அவளுக்கு ஆசீர்வாதமாய்க் கனிவையும், கவர்ச்சியையும் அருளினார். இன்பக் கிண்ணத்தை அவளிடம் கொடுத்து “இறந்த காலத்தையும், எதிர் காலத்தையும் நீ மறக்க நேர்ந்தால் ஒழிய இந்தக் கிண்ணத்திலிருந்து நீ எதையும் அருந்தாதே” என்று கூறினார். “ஏனென்றால் மகிழ்ச்சி என்பது தற்போதைய தருணத்தைத் தவிர வேறு சமயத்தில் வருவதில்லை.” மேலும் துன்பக் கிண்ணத்தையும் அவளுக்குக் கொடுத்து, “இந்தக் கிண்ணத்தில் உள்ளதைக் குடி. அப்போதுதான் வாழ்க்கையின் இன்பவேளை விரைந்து நழுவும் தருணத்தை நீ அறிவாய். ஏனெனில் சோகமே எப்போதும் நம்மிடம் மேலோங்கி நிற்பது.”

கலில் கிப்ரான்.

கலில் கிப்ரான் வாழ்க்கை வரலாறு

லெபனீஸ் அமெரிக்கக் கவிஞரான கலில் கிப்ரான் ஓர் உயர்ந்த ஓவியக் கலைஞர், சிறந்த ஆன்மீகக் கட்டுரையாளர், ஒப்பற்ற கவிஞர், உன்னத வேதாந்த மேதை. கிறித்துவரான கலில் கிப்ரான் முதலில் அராபிக் மொழியிலும், பிறகு ஆங்கிலத்திலும் தன் கலைப் படைப்புகளை வடித்தார். 1923 இல் அவர் ஆங்கிலத்தில் எழுதிய “தீர்க்கதரிசி” (Prophet) என்னும் கவிதைத் தொகுப்பு மூலம் உலகப் புகழ் பெற்றார். 26 கவிதைக் கட்டுரைகள் கொண்ட அந்த நூல் 20 மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. வறுமையில் வாழ்ந்த கலில் கிப்ரான் முறையாகக் கல்வி கற்க முடியாமல், இளம் வயதில் ஒரு கிராமப் பாதிரியாரிடம் மதத்தின் உன்னதம் பற்றியும் பைபிளைப் பற்றியும் விளக்கமாக அறிந்து பிறகு அராபிக், சிரியா மொழிகளை அவரிடம் கற்றுக் கொண்டார். பின்னர் தானே உலக வரலாறுகளையும், விஞ்ஞான அறிவையும் பெற்றுக் கொண்டார். பத்து வயதாகும் போது கலிக் கிப்ரான் குன்றிலிருந்து தவறிக் கீழே விழுந்து வலது தோளைப் பலமாகக் காயப் படுத்திக் கொண்டார். அந்த உடற் பழுது அவரை வாழ்க்கை முழுவதிலும் பாதித்தது.

வட லெபானில் உள்ள பிஷாரி (Bechari or Bscharri in Lebanon) என்னும் ஊரில் 1883 ஜனவரி 6 ஆம் தேதி பிறந்தார் கலில் கிப்ரான். அப்போது துருக்கியைச் சேர்ந்த ஒரு மாநிலமாக இருந்தது லெபனான். அதில் ஒரு பகுதி சிரியாவைச் சேர்ந்திருந்தது. அவர் பிறக்கும் போது அவரது அன்னைக்கு முப்பது வயது.. தாயின் மூன்றாவது கணவருக்குப் பிறந்தவர்தான் கலில் கிப்ரான். தகப்பனார் பொறுப்பற்றவராய் வாழ்ந்து குடும்பத்தை வறுமையில் தள்ளித் தாயாரால் ஒதுக்கப் பட்டார். படிப்பில்லாத அன்னை மன உறுதியால் இன்னலுடன் குடும்பத்தைக் காப்பாற்றினார். கலில் கிப்ரானுக்கு எட்டு வயதாகும் போது, அவரது தகப்பனார் வரிப்பணத்தைச் சரிவரக் கட்டாமல் சிறையில் தள்ளப்பட்டார். அரசாங்கம் அவர்களது வீட்டைப் பறிமுதல் செய்ததால் அனைவரும் வெளியேற்றப் பட்டு உறவினர் இல்லத்தில் வாழ வேண்டியதாயிற்று. மன ஊக்கமுடைய அன்னை தன் பிள்ளைகளை (இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண்கள்) அழைத்துக் கொண்டு அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தார். 1894 இல் விடுதலையான தகப்பனார் புலம்பெயரத் தயங்கி லென்பனானில் தங்கிக் கொண்டார்.

சிரியன் சமூகக் குழுவினர் வாழும் பாஸ்டனில் அனைவரும் முதலில் தங்கினார். 1895 செப்டம்பர் 30 இல் கலில் கிப்ரான் தனது 12 ஆவது வயதில் முதன்முதல் பள்ளியில் சேர்ந்து ஆங்கலம் கற்கலானார். அந்த வயது முதல் அவரது ஓவியத் திறமை சீராக வெளிப்பட்டு ஆசிரியர் பலரது கவனத்தைக் கவர்ந்தது. பாஸ்டனில் செழித்த கலாச்சார, நாடக, கான இசைக் கலைகள் கலில் கிப்ரானைப் பற்றிக் கொண்டன. 1897 இல் கலில் கிப்ரான் லெபனானுக்குத் திரும்பி பேரூட்டில் இரண்டு ஆண்டுகள் தங்கி அரேபிக் இலக்கியம் கற்றார். 1904 இல் (21 ஆவது வயதில்) கலில் கிப்ரானின் முதல் ஓவியக் கண்காட்சி பாஸ்டனில் அரங்கேறியது. 1908 முதல் 1910 வரை புகழ் பெற்ற பிரென்ச் ஓவிய மேதை “ஆகஸ்டு ரோடின்” (August Rodin 1840-1917) கீழ் சிற்பக் கலை, ஓவியக் கலைப் பயிற்சி பெற கலில் கிப்ரான் பாரிசுக்குச் சென்றார். கலில் கிப்ரானின் ஓவியங்கள் பல அவரது குரு ஆகஸ்டு ரோடின் படைப்புகளை ஒத்திருப்பதில் வியப்பில்லை.

கலில் கிப்ரானின் ஆரம்ப காலப் படைப்புகள் அரேபிக் மொழியிலும், பிற்காலப் படைப்புகள் 1918 முதல் ஆங்கிலத்திலும் வடிக்கப் பட்டன. 1912 இல் அவர் நியூயார்க் நகரில் இடம்மாறி கவிதைப் படைப்புக்கும் ஓவியக் கலைக்கும் தன் ஆயுட் காலத்தை அர்ப்பணித்தார். தனது 48 ஆவது வயதில் (ஏப்ரல் 10 1931) கலில் கிப்ரான் நியூயார்க் நகரில் காலமானர். அவரது உடல் தாய் நாடான லெபனானுக்குக் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது..

++++++++++++++++++

கவிதை -1

என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே !

என் ஆத்மாவே ! நீ
ஏன் அழுகிறாய் ?
என் பலவீனத்தை நீ
அறியாயோ ?
உன் கண்ணீரின் கூர்மை
காயப் படுத்தும்
என்னை ஊடுருவி !
காரணம்
என்பிழை தெரியா தெனக்கு !
எதுவரை நீடிக்கும்
உன் அழுகை ?
நின் கனவுகள், ஆசைகள்,
அறிவுரைகள்
எவற்றையும் கலைக்க என்னிடம்
எதுவு மில்லை
மனித வார்த்தைகள் தவிர !

என் மீது கண்ணோக்கு
என் ஆத்மாவே !
உன் உபதேசங்களைக்
கவன மாய் நான்
பின்பற்றி
இரை யானது
என் வாழ்வு முழுவதும் !
எப்படி நொகிறது பார்
என் இதயம் ?
களைத்துப் போனது
என் வாழ்க்கை
பின்பற்றி உன்னை !

உன்னதம் பெற்றது
என் இதயம்
உன் ஆசன பீடத்தில் !
அடிமை யானது உன்னிடம்
இப்போது
பிணைத்துக் கொண்டு ! எனக்குத்
துணைவனாய் இருந்த
என் பொறுமை
இப்போது எனக் கெதிராய்ப்
போட்டி போடுது
பகைவனாய் !
வாலிப வயதெனக்கு
வழங்கியது
வாழ்வில் ஓர் நம்பிக்கை !
கண்டிக்கும் அது என்னை
இப்போது
கவனக் குறைவால்
பேணிப் பாராததால் !

எப்போதும் என்னை ஏன்
வற்புறுத் துகிறாய்
என் ஆத்மாவே ?
எனது இன்பங்களை எல்லாம்
புறக்க ணித்தேன் !
உன் அறிவுரைக் குடன்பட்டு
என்மீது புகுத்திய
உன் நியதியைப் பின்பற்றி
வாழ்வின் பூரிப்பைத்
துறந்தேன் !
நீதி வழங்கு நீ எனக்கு !
அல்லது
கொடு மரணத்தை
விடுவிக்க என்னை
நியாயமே உனது உன்னத
நெறியான தால் !

(தொடரும்)

************
தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

5. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

For further reading:
This Man from Lebanon by B. Young (1945); This Man from Lebanon by B. Young (1945); Kahlil Gibran: A Biography by M. Naimy (1959); The Parables of Kahlil Gibran by A.S. Otto (1963); Kahlil Gibran by K.S. Hawi (1963); An Introduction to Kahlil Gibran by S.B. Bushrui (1970); Kahlil Gibran: The Nature of Love by A.D. Sherfan (1971); Kahlil Gibran by J. Gibran and K. Gibran (1975); Gibran of Lebanon, ed. by S.B. Bushrui and P. Gotch (1975); The Meaning of Kahlil Gibran by M.S. Daoudi (1982); The Lebanese Prophets of New York by N. Naimy (1985); Kahlil Gibran of Lebanon by S.B. Bushrui (1987); Modern Arabic Poetry, ed. by Salma Khadra Jayyusi (1987); Kahlil Gibran: A Prophet in the Making by W. Shehadi (1991); Kahlil Gibran: His Life and World by Jean Gibran (1998)

For further information:
The Prophet By Kahlil Gibran /
A Multi media Tribute – Suom.: Gibranin keskeinen tuotanto on julkaistu suomeksi nimellயூ Idயூn ja lயூnnen profeetta, teos Ajan virta sisயூltயூயூ Gibranin mietelauseita. Teokseen Mestarin sanoja (1993) on koottu Gibranin kaksitoista kirjaa.

Selected works:
• AL-MUSIQA, 1905
• ARA’IS AL MURUDJ, 1906 – Nymphs of the Valley
• STONEFOLDS, 1907
• ON THE TRESHOLD, 1907
• AL-ARWAH AL-MUTAMARRIDA, 1908 – Spirits Rebellious – Kapinalliset henget
• DAILY BREAD, 1910
• FIRES, 1912
• AL-AGNIHA AL-MUTAKASSIRA, 1912 – The Broken Wings – Sயூrkyneet siivet
• DAM’AH WA-IBTISAMAH, 1914 – A Tear and a Smile
• THE MADMAN, 1918 – Jumalan tuli
• TWENTY DRAWINGS, 1919
• AL-MAWAKIB, 1919 – The Procession
• AL-‘AWASIF, 1920
• THE FORERUNNER, 1920 – Edellயூkயூvijயூ
• THE PROPHET, 1923 – Profeetta
• AL-BADA’I’ WA-AL-TARA’IF, 1923
• SAND AND FOAM, 1926 – Merta ja hiekka
• JESUS, THE SON OF MAN, 1928 – Jeesus, ihmisen poika, suom. Helmi Krohn
• THE EARTH GODS, 1931 – Maan jumalat
• THE WANDERER, 1932 – Vaeltaja
• GARDEN OF THE PROPHET, 1933 – Profeetan puutarha
• PROSE POEMS, 1934 – Temppelin portilla
• TEARS AND LAUGHTER, 1946
• THE SECRETS OF THE HEART, 1947
• SPIRIT REBELLIOUS, 1948
• NYMPHS OF THE VALLEY, 1948
• A TREASURY OF KAHLIL GIBRAN, 1951
• THE BROKEN WINGS, 1957
• THE PROCESSION, 1958
• A SELF PORTRAIT, 1959
• THOUGHTS AND MEDITATIONS, 1960
• A SECOND TREASURY OF KAHLIL GIBRAN, 1962
• SPIRITUAL SAYINGS, 1962
• THE VOICE OF THE MASTER, 1963 – Mestarin யூயூni
• MIRRORS OF THE SOUL, 1965
• THE WISDON OF GIBRAN, 1966
• SPIRITUAL SAYINGS, 1970
• PROPHESIES OF LOVE, 1971
• BELOVED PROPHET, 1972
• LAZARUS AND HIS BELOVED, 1973
• THE DEATH OF THE PROPHET, 1979 (as remembered by Almitra, channeled through Jason M. Leen)
• DRAMAS OF LIFE, 1982
• BLUE FLAME, 1983
• KAHLIL GIBRAN: PAINTINGS AND DRAWINGS 1905-1930, 1989

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 26, 2009)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts