இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 28 in the series 20081127_Issue

வே பிச்சுமணி


இன்னொரு மழை நாளில்

உன் வருகை
தொடர் மழை
நாட்களுக்குப்பின்
இளம் சூரியன்

உன் பார்வை
என் மனஅழுக்கை
துவைத்து காயவைக்கும்
ஒளிக்கதிர்

உன் அருகாமை
துன்ப பாம்புகளை
மீண்டும் புத்துக்குள்
விரட்டும்
உனது வெப்பம்

நீ வாராததால்
சத்தமிட்ட தவளை
நண்பர்கள் கொட்டம்
அடங்கினர்
உன்னை பார்த்து

இன்னொரு
மழை நாளில்
மேககுடை பிடித்து வந்து
இடை இடையே
ஒளிமுகம் காட்டுநடுசாமம்

யாருக்கோ திடீரென
சாமிவந்தது போல்
நடுசாமத்தில் விழிப்பு வந்தது

பின்னிரவு முழுவதும்
இருமல் காரனின்
இரவு போல் நீண்டது

மாந்திரிகன் குரளிக்கு விடாது
ஏவலிட வேன்டியது போல்
முன்னாள் நினைவுகள்
படுக்கையில் புரள வைத்தன

வெளியில் வந்து விண்நோக்கினால்
முற்றத்தில் இட்ட நட்சத்திர கோலங்கள்
நடுவீட்டுக்கு வந்திருந்தது

மனிதர்கள் நடமாட்டமில்லாததால்
தெருவிளக்குகள் வெளிச்சத்தை
தனது அடியெலயெ வட்டமிட்டது

தலைவன் கோஷத்திற்கு ஏற்ப
கோஷமிடம் தொண்டர்களாய்
ஒரு நாயினை தொடர்ந்து
பல நாய்கள் தொடர் ஓலமிட்டன

ஊரில் தனியே இருக்கும் அம்மாவின் நினைவு
அலுவலகத்தில் தேங்கியிருக்கும் கோப்புகள்
மகளின் நாளையே பரீட்சை என
வால்பிடித்து வந்த நிகழ்காலத்தை
தொடர்ந்து

மேய்ச்சலுக்கு சென்ற மாடு
தன்னாகவே வீடு வந்தது போல்
தூக்கம் வந்தது


Series Navigation

author

வே பிச்சுமணி

வே பிச்சுமணி

Similar Posts