தலைப்பு

This entry is part [part not set] of 34 in the series 20081016_Issue

கவிக்கண்ணன்


அன்னையின் சுகப்பிரசவத்தால்
இப்புனித தமிழ்மண்ணை
தொட்டுத்தவழ்ந்த என்னை
அவள்
ஆசையுடன் அள்ளித்தந்த
முத்தம்
என் வாழ்க்கை நாவலின்
முதல் தலைப்பு

தத்தித் தள்ளாடி
எழுந்து நின்றபோது
புத்திசொல்லும் தந்த
என் மொட்டு கரம்பிடித்து
நடை பழக்கையிலே
அவர் கட்டித்தந்த
முத்தம்
என் வாழ்க்கை நாவலின்
இரண்டாவது தலைப்பு

எட்டுவயதில் ஏட்டைச்சுமந்து
பாரதியின் பாப்பா பாட்டுப்பாடி
பள்ளியில் முதல்வனானபோது
ஒழுக்கம் சொல்லும் ஆசி¡¢யை
என் உச்சிமுகர்ந்து கொடுத்த
முத்தம்
என் வாழ்க்கை நாவலின்
மூன்றாவது தலைப்பு

பதினாறுவயதில் பருவமடைந்து
பருவத்தின் பயனாய்
காதலைச்சுமந்து
மனதினைக் கவர்ந்த என்னவள்
என் மார்பினில் பதித்த
முத்தம்
என் வாழ்க்கை நாவலின்
நான்காவது தலைப்பு

இருமணங்களும்
திருமணத்தில் இணைய
இருட்டினில் அவளுடன்
நான் பிணைய
நிரப்பப்படாத காகிதத்தில்
கிறுக்கப்பட்ட கவிதையைப்போல்
என்னவளின் மேனியில் பதித்த
என்னற்ற முத்தங்கள்
என் வாழ்க்கை நாவலின்
ஐந்தாவது தலைப்பு

என்
ஆண்மைக்கு முகவா¢யாய்
அவளின்
பெண்மைக்கு முதல்வா¢யாய்
முத்துப்போன்ற முதற்குழந்தை
முயன்று அவன் நடக்கையிலே
முத்தாய்ப்பாய் கொடுத்த
முத்தம்
என் வாழ்க்கை நாவலின்
ஆறாவது தலைப்பு

ஓ…
இதேபோன்ற முத்தத்தைதான்
என் தந்தை
எனக்கு அன்று தந்தாரோ
பு¡¢கிறது… பு¡¢கிறது…
சுழற்சி என்பதுதான்
உலகவாழ்க்கையின்
உன்னதமான தலைப்பு.

Series Navigation

author

கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

Similar Posts