காற்றினிலே வரும் கீதங்கள் – 30 பூவிதழில் சிக்கிய தேனீ !

This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


தூண்டிற் புழுவினைப் போல் – வெளியே
சுடர் விளக்கினைப் போல்
நீண்ட பொழுதாக – எனது
நெஞ்சம் துடித்ததடீ !
கூண்டுக் கிளியினைப் போல் – தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன் !
வேண்டும் பொருளை எல்லாம் – மனது
வெறுத்து விட்டதடீ !

பாரதியார் (கண்ணன் என் காதலன் !)

++++++++++++++++++++++++

காற்றினிலே வரும் கீதங்கள் – 30
பூதவிதழில் சிக்கிய தேனீ !

++++++++++++++++++++++++

பாதை முழுதும் புதுமை
பொங்கும்
காதலைப் பற்றி
என்ன சொல்வீர் தோழியரே ?
உன்னத மானவனுக்கு
உன் நேசத்தை அளிக்கும் போது
முதற் படியில்
சிதைந்து போவதுன் மேனி !
அடுத்துத் தயாராய் இரு
அவன் உன் சிரசில்
அமர்ந்து கொள்ள !
விளக்கொளியை வட்டமிடும்
விட்டில் பூச்சி போல்
தீயிக்கு இரையாகத்
தயாராகு !

வேட்டையில் வேடனிடம் ஓடி
மாட்டிக் கொள்ளும்
மானாய் வாழ்ந்திடு !
குள்ளப் பறவை
தீக் கங்குகளை விழுங்கும்
நிலவு மேல் கொண்ட
நேசத்துக் காக !
களிப்புடன் மடிவேன்
கடல் நீரை அருக முடியாத
மீனைப் போல் !
தேனீ போல் மாள்வேன்
இனிக்கும் பூவிதழ்கள் மூடிச்
சிக்கிக் கொண்டு !
தன்னைக் கோமகனுக்கு
தாரை வார்த்து
மீரா சொல்கிறாள் :
“ஒற்றைத் தாமரை என்னை
விழுங்கிக் கொள்ளும்
முழுமையாக !”

*****************************
(English Translation By : Jane Hirshfield )

*****************************
(தொடரும்)

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 27 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts