காற்றினிலே வரும் கீதங்கள் – 25 விலகிச் செல்லாது விதி !

This entry is part [part not set] of 26 in the series 20080626_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


பிறந்தது மறக்குலத்தில் ! – அவன்
பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில் ! . . . .
நிறந்தனில் கருமை கொண்டான் ! – அவன்
நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள் !
. . . . .
ஏழைகளைத் தோழமை கொள்வான் ! – செல்வம்
ஏறியவர் தமைக்கண்டு சீறி விழுவான் !
தாழவரும் துன்ப மதிலும், – நெஞ்சத்
தளர்ச்சிகொள் ளாதவர்க்குச் செல்வம் அளிப்பான் !
நாழிகைக்கோர் புத்தியுடையான் ! – ஒரு
நாளிலிருந்த படிமற்றோர் நாளினி லில்லை !
பாழிடத்தை நாடி இருப்பான் ! – பல
பாட்டினிலும், கதையிலும் நேரம் அழிப்பான் !


பாரதியார் (கண்ணன் என் தந்தை)

++++++++++++++++++++++++
காற்றினிலே வரும் கீதங்கள் – 25
விலகிச் செல்லாது விதி !
++++++++++++++++++++++++

எப்போது சந்திப்பேன்
எனது கருத்த கோமானை ?
அனுதினமும்
முடங்கிப் போகிறேன் எனது
கடமைப் பணிகளில்
ஈரேழு மணி நேரம் !
உறக்கத்தில் கிடக்கும்
ஒன்பது தோழியர் எழுந்திங்கு
இன்னும் வந்திலர் !
மகத்துவம் பெற்றது
மனிதப் பிறப்பென
மீரா சொல்கிறாள் !
பிறந்த பின் மாந்தர்
உறக்கத்தில்
வீணாக்கி விடுவர் பொழுதை !
ஒப்படைத்து விடு
உன்னைக்
கருமேனி யானுக்கு !
விலகிச் செல்லாது விதி
தன் பாதை
நழுவ விட்டு !

+++++++++

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 22, 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts