காற்றினிலே வரும் கீதங்கள் – 21 எதுவும் சொந்தமில்லை இப்புவியில் !

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


நாடு முழுதும் சுற்றிநான் – பல
நாட்கள் அலைந்திடும் போதினில் – நிறைந்
தோடும் யமுனைக் கரையிலே – தடி
ஊன்றிச் சென்றார் ஓர் கிழவனார் . . . .
என்னுள்ளத் தாசை அறிந்தவர் – மிக
இன்புற் றுரைத்திட லாயினர் – “தம்பி
நின்னுளத் திற்குத் தகுந்தவன் – சுடர்
நித்திய மோனத் திருப்பவன் . . . . கண்ணன்
தன்னைச் சரணென்று போவையேல் – அவன்
சத்தியம் கூறுவன்,” என்றனர்.

பாரதியார் (கண்ணன் என் சற்குரு)

++++++++++++++++++++++++

காற்றினிலே வரும் கீதங்கள் – 21
எதுவும் சொந்தமில்லை இப்புவியில் !

கருமை நிறக்கண்ணா ! அடியாள்
உன்னிடம் அடைக்கலம் !
என்னைக் காப்பது
எவ்விதம்
என்று அறிபவன் நீ ஒருவனே !
அறுபத்தெட்டு புண்ணிய தளமனைத்தும்
அலைந்து வந்தேன் தாறுமாறாய் !
ஆயினும் உன்னுடன்
உறவு பூணாத தோல்வியை
ஒப்புக் கொள்ளும்
உணர்வு எனக் கில்லை !
எந்தன் கூக்குரல் கேளாய் !
இந்தப் புவியில் இருக்கும்
எந்தப் பந்தமும்
சொந்தமாய்த் தெரிய வில்லை
எனக்குரிய தென்று !
உனை நம்பி மீரா உன்னிடம்
வந்து விட்டாள் !
செய்வதினி என்ன வென்பதுன்
கைவசம் உள்ளது.
அந்தோ முராரி !
நாமழைக்கும்
பூமியெனும் இந்தக்
கயிற்று முடிச்சி யிலிருந்து
அவிழ்த்து விடு என்னை !

+++++++++

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)
************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 26, 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts