காற்றினிலே வரும் கீதங்கள் – 20 ஏழையின் காதலன் !

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


இங்கிதனால் யானும்
இடர்மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான்,
“இடைச்சாதி நான்” என்றான்.
“மாடு கன்று மேய்த்திடுவேன் !
மக்களை நான் காத்திடுவேன்.
வீடு பெருக்கி
விளக்கேற்றி வைத்திடுவேன். . . . .
காதல் பெரிதெனக்கு !
காசு பெரிதில்லை !” . . . .
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல்
வண்ணமுறக் காக்கின்றான். . . .
எங்கிருந்தோ வந்தான் !
இடைச்சாதி என்று சொன்னான் !
இங்கிவனை யான்பெறவே
என்ன தவம் செய்து விட்டேன் !

பாரதியார் (கண்ணன் என் காவலன்)


காற்றினிலே வரும் கீதங்கள் – 20
ஏழையின் காதலன் !

பாலைவனக் குடிவாசி
படிப்பறி வில்லாதவள் !
பற்களில்
கடித்த மாங்கனி
இனித்தது !
பழக்க வழக்கம்
மிக்க மோசம் ! கீழினத்தவள் !
அழுக்கு மேனி !
ஒழுக்க மில்லாதவள் ! அவள் தின்ற
எச்சிற் கனியை
எடுத்துச் சுவைத்தான்
கோமகன் !
ஏனெனில் நேசிக்கத் தெரிந்தவள்
அந்தக் குடிவாசி !

பகட்டு வாழ்வுக்கும்
பட்டிப் புழுதிக்கும்
முரண் அறியாத அப்பாவி !
வேதம் அறியாதவள் ! ஆயினும்
காதல் அமுதைச் சுவைத்தவள் !
இரதம் தூக்கிச் செல்லும்
அந்தக் குமரியை ! இப்போது
சொர்க்கத்தில் உள்ளாள் இறைவன்
பக்கத்தில்
பேரின்பக் கடலில் மூழ்கி !
ஏழையின் கோமகன்
இரக்கப் படுவான் யார் மீதும் !
மீரா சொல்கிறாள்:
அவளும் தான்
இடையர் குலப் பெண்ணாய்
உதித்தவள்
முன்னைப் பிறப்பில் !

+++++++++

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 18, 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts