காற்றினிலே வரும் கீதங்கள் – 18 விதி எழுதி வைத்தது !

This entry is part [part not set] of 41 in the series 20080508_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் – நீ
கண்டுவர வேணுமடித் தங்கமே தங்கம் !
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் – பின்னர்
ஏதெனிலும் செய்வமடித் தங்கமே தங்கம் ! . . . .
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் – அதைப்
பற்றி மறக்குதில்லை பஞ்சை உள்ளமே !

பாரதியார் (கண்ணன் என் காதலன்)

++++++++++++++++++++++++

காற்றினிலே வரும் கீதங்கள் – 18
விதி எழுதி வைத்தது !

கருமேனியான் மட்டுமென் கண்களின்
காட்சி தோழீ !
கருமை பொங்கும்
கரிய மேனியில் என்ன மினிமினுப்பு !
இருளின் மயக்கத்திலே மூழ்கித்
தவிக்கிறேன்.
ஆடும் தளங்களில் என்
பாதம் படும்போ தெல்லாம்
மீரா காண்பது
காரிருள் அடர்த்தி
நேர்வழிப் பாதையில் !
காட்டுப் பாதையில்
போவது சுலபம் !

யோகியே ! உனது அந்தரங்க
இரகசியத்தை
அறிய முடியாதவள் நான் !
உறுப்புகளில் திருநீறு பூசி,
உத்திராட்ச மாலை கழுத்தில் சூடி,
புனித வேடத்தில்
குகையில் அமர்ந்து தவம் செய்தேன் !
கருமேனியான் மீது
காதல் மோகம் ! அந்தோ இல்லை !
மடியாத அவன்
மன அந்தரங் கத்தைத் தொட
முடியாதவள் நான் !
மீராவுக்கு
எதிர்ப்படுவ தெல்லாம்
விதியின் கை
எழுதி வைத்தவை !

*********

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightenment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 6, 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts