காற்றினிலே வரும் கீதங்கள் -7 எனது அடங்காத மோகம் !

This entry is part [part not set] of 41 in the series 20080221_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



கூண்டுக் கிளியினைப் போல் – தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன் !
வேண்டும் பொருளை யெல்லாம் – மனது
வெறுத்து விட்டதடீ !

பாரதியார் (கண்ணன் என் காதலன்)

எனது அடங்காத மோகம் !

நான் உனக்கு அடியாள் !
கயிறில் கட்டி விடு என்னை
மீரா உனது அடிமை !
அதிகாலையில் எழுந்து
அமர்ந்தி ருக்கிறாள் தோட்டத்தில்.
பிருந்தாவனக்
காட்டுப் பாதை யெல்லாம்
மீராவின்
கானங்கள் வட்டமிடும் !
பிறவிக்குப் பின் பிறவியாய்த்
தொடரும் என்னை
உடற் காய்ச்சல் ! உனது நினைவுகள் !
அடங்காத மோகம் !
உனைக் காணும் ஆவலில்
உடுத்திக் கொள்வேன் காவி அங்கியை !
மனதை
ஒருமைப் படுத்த
பிருந்தாவனம் செல்வார் சாதுக்கள் !
மாய வித்தைகள் புரிவார்
முனிவர்கள் !
புனிதர் உச்சரிப்பார் தெய்வீகக்
கீர்த்தனைகள் !
மீரா ஆழ்ந்து நேசிப்பவள் பிரபு !
இரகசிய மானவள் !
ஒவ்வோர் இரவிலும் அவள்
மனமுடைந்து போய்க்
காத்துக் கிடக்கிறாள்
ஆற்றங்
கரையிலே அவன்
கண்ணோரக் காட்சிக்கு !

*********

(ஆங்கிலத்தில்: ராபர்ட் பிலை)

(தொடரும்)

************

Holy Fire
(A Collection of English Poems)

(Nine Visionary Poets & the Quest for Enlightewnment) 1994

Edited By : Daniel Halpern
Harper Prennial
A Division of Harper Collins Publishers

1. Mirabhai Songs were tranlated from Rajasthani by : 1. Andrew Shelling 2. Robert Bly & 3. Jane Hirshfield.

2. Mira Bhai By : Swami Sivananda (February 18, 2005)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (February 18, 2008)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts