தாஜ் கவிதைகள்

0 minutes, 2 seconds Read
This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

தாஜ்


இறந்த காலம்
**
தன் பேரழிவின்
உயிர்வதை யெண்ணி
அடிமரம் அழும்.
நின்று படர்ந்து
நிழல் காத்த காலத்தினை
குரலற்றத் துடிப்பில்
நோந்து கொள்ளும்.
சாய்த்துப் பிளந்த
கோரக் கரங்களின்
ஆராஜகத்தை
மங்கும் ஜீவன் வியக்கும்.
காற்றாய் காலம் தழுவியாற்ற
காய்ந்து வரும் காயங்களில்
பூக்கும் புழுக்கள்
அரித்தெடுக்கும்
நமச்சலையும் சகித்து
ஓர் தூறலின் ஈரத்தில்
தன் வேரடித் துளிர்களை
வெக்களித்த உதயத்தில் காமிக்கும்.

****

வெள்ளை அறிக்கை.
**
இயற்கையின் வீச்சு
மழுங்கி விட்டது.
பேரிடி மின்னலுக்குப் பிறகும்
கொஞ்சம் மட்டும்.
பருவ மழை பொய்த்து விட்டது.

தூறலின் சாரலில்
புலண்கள் விழித்து
ஆனந்தம் பாடியதும்
மலர்களின் மகந்தத்தில்
நீர் பட்டு
சிலிர்க்கக் கண்டதும்
கால்களை மழைநீரில்
நனைய விட்டு
விளையாடியதும்
கெட்டிமேளத்தோடு கைகோர்த்த
அடைமழை காலத்தில்
தொப்பமாய் நனைந்து கிடந்ததும்
ஞாபகத்தில் இனிக்கிறது.

****
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

author

தாஜ்

தாஜ்

Similar Posts