கீதாஞ்சலி (46) – வாசல் முன் நீ வந்தாய்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


உன் ஆசனத் திலிருந்து
கீழிறங்கி
என் குடிசை நோக்கி
வந்தாய்!
வாசற் கதவோரம்
நின்றாய்!
ஏகாந்தமாய் மூலை ஒன்றில்
நானிருந்தேன்,
கானம் பாடிய
வண்ணம்!
கீதத்தின் இன்னிசை
உந்தன்
காதில் விழுந்து
கவர்ந்த துன்னை!
கீழிறங்கி வந்து
குடிசை
வாயிற் கதவோரம் நீ
வந்து நின்றாய்!

உன்னிசை மண்டபத்தில் எண்ணிலா
இன்னிசை
ஞானிகள் அநேகர்
எந்நேரமும்
கானம் பாடி வருகிறார்!
ஆயினும்
ஆரம்பப் பாடக னான
என்னெளிய
கீதங்கள்
மோதிக் காதலிக்கும் உன்னை!
ஊனுருகி நானிசைக்கும்
மோன கீதம்
உலகத்தின்
உன்னத இன்னிசையுடன்
பின்னிக் கொண்டது! நீ
கீழிறங்கி வந்து
குடிசை
வாயிற் கதவோரம்
நின்றாய்,
வெகுமதியாக
கையி லோர் பூ வேந்தி!

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (October 23, 2005)]

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts