கவிதை

This entry is part [part not set] of 29 in the series 20050902_Issue

சுப்ரபாரதி மணியன்


வரிசையிலிருந்து
தள்ளி நிற்பதுதான் சுவாரஸ்யமாயிருக்கிறது

தாறுமாறாய் நிற்பதில்
இன்னும் மகிழ்ச்சி.

வரிசை அடையாளத்திற்கான அங்கீகாரத்தை
வேண்டிக் கொண்டே நிற்கிறேன்
.
உறுமி அதிகார வார்த்தைகளைத் துப்பும்
எவனும் பக்கமில்லை

இப்படி இருப்பது ஒழுங்குதான்
அது எனக்குச் சில சமயம் பிடித்தும்
சில சமயம் பிடிக்காமலும்
.
என்னை மிருகமாக்கிவிடமுடியாது
ஒரு வரிசையின் ஒழுங்குற்குள்
என்னைக் கொண்டு வருவதின் மூலம்.

வரிசை சென்றடைகிற இடத்தில் இருப்பவன்
அசல் மிருகம் போலத்தான்.
அடைபட்ட கம்பிகளுக்குப்பின்னால் இருக்கிறான்.
உறுமலில் பொறி பறக்கிறது
அவன் இடத்தை அடைவதற்காய்
ஒவ்வொருவரும் போட்டி போடுகின்றனர்.

இது போல் பல வரிசைகள்
பல கட்டிடங்களில்
பல தெருக்களில்.

இந்த உருவத்துடன் வரிசைகளில் நிற்பது
சிரமமாய் இருக்கிறது.

உங்கள் உருவத்துடன்
யாராவது நிற்கக்கூடும்.
அடையாளம் கண்டும் நகர்ந்து விடுங்கள்
அதுதான் சுவாரஸ்யம்.

—-
srimukhi@sancharnet.in

Series Navigation

author

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்

Similar Posts