இயக்கம்…

This entry is part [part not set] of 28 in the series 20050826_Issue

பட்டுக்கோட்டை தமிழ் மதி


உணர்வுகள் கொண்டு
ஓடுவது பயணம்
நாடி எதையும்
நடப்பதும் பயணம்

நம்புவீர்களா ?
படுத்துத்தரையில்
கிடப்பதும் பயணம்.

ஓடும்காலத்தோடு
உலக உருண்டை
உருண்டோடிக் கொண்டிருக்க
இந்த
உலகத்தோடு ஓடும் பயணம்
படுத்துத்தரையில் கிடக்கிற பயணம்.

இட்டுவைக்கும் ஓரடியும்
இந்த
உலகம் மிஞ்சிய ஒரு பயணம்.

இப்போதே
எத்தனை எத்தனை அடிகள்
எடுத்துவைக்க முடியும்.

எடுத்துவைக்கிற ஓரடியும்
உலகத்தை மிஞ்சுகிற போது
மண்ணில்தான் எது தோல்வி ?

இயக்கம் என்பது
எத்தனை எத்தனை வெற்றி!

சுறுசுறுப்பு என்பது
எத்தனை எத்தனை உயிர்ப்பு!

ஓரிடத்தில் நிற்கும் பூங்கொடி
உயரஉயரதாவுவதில்
உள்ளுக்குள் இருக்கும் மகிழ்ச்சி
பூக்களாய் சிரித்தது.

நானும்
ஒரு
உறக்கத்திலிருந்து எழுந்தேன்

பட்டுக்கோட்டை தமிழ் மதி
tamilmathi@tamilmathi.com

Series Navigation

author

பட்டுக்கோட்டை தமிழ்மதி

பட்டுக்கோட்டை தமிழ்மதி

Similar Posts