ஒரு மரத்தின் இறப்பு!

0 minutes, 3 seconds Read
This entry is part [part not set] of 35 in the series 20050304_Issue

பாலா


என்னை மிகவும் பாதித்த ‘Death of a Tree ‘ என்ற ஒரு ஆங்கிலக் கவிதையின் மொழிபெயர்ப்பு இது!

அந்த மின்ரம்பத்தின் பேரிரைச்சல்
மெல்ல மெல்ல அடங்கி ஓய்ந்தது!
அவள் முன்னோக்கிச் சாய்ந்தாள், வீழ்ந்தாள்!

ஒரு சோகமிக்க திடார் தாக்கம்,
அப்பசுமைத் தாயின் ஊனத்திலும்
அவள் நீட்டல்களின் இறுதி மடங்கலிலும்,
மிச்சமிருந்த அவளை மெல்லத் தீண்டினேன்!

ஒரு நூறு ஆண்டுகளுக்கான நளினப் பேரழகு அழிந்தது!
அவளது இலைகளின் வெளிர் நிறமானது
அக்காலை நேரத் தூறலில் ஒன்றறக் கலந்தது!

அந்த வனராணியை வீழ்த்திய பெருமை ஒரு
பெருங்காற்றுக்கோ புயலுக்கோ சேர்ந்திருக்கலாம்!
அவளுக்கு அது ஒரு சரியான யுத்தம் விளைத்த
கெளரவ இறப்பாகவும், இந்த அவமானமிக்க
சர்வ நிச்சயத்தினும் ஏற்றதாகவும் அமைந்திருக்கலாம்!

எதனால் ? இவ்வீழ்ச்சி மானுடன் கையால் விளைந்தது,
மனிதன் என்றாலே துன்பமும் வலியுமே!
நான் அவ்விடத்தை விட்டு வேதனையோடு
ஒரு இழப்பை நன்குணர்ந்து அகன்று சென்றேன்!

இதுவும் வாழ்க்கை விளையாட்டில் ஒரு அங்கம் தானோ ?

என்றென்றும் அன்புடன்
பாலா
—-
balaji_ammu@yahoo.com

Series Navigation

author

பாலா

பாலா

Similar Posts