நீண்ட உறக்கம்

0 minutes, 1 second Read
This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

கஜன்


====

இயற்கையிலிருந்து இனம் பிரிக்க முடியாதவையாய்
செயற்கை மலர்கள் அருகருகே அழகு செய்தன.

முன்வரிசை ஆசனங்கள் தொடர்ந்து நிரப்பப் பட்டிருக்க
விட்டு விட்டு வெறுமைமாய் மற்றவை.

இடையிடையே ஒலிக்கும் விசும்பல்களின் மத்தியில்
மணமகள் கோலத்தில்
மலர்ச் செண்டுகள் மத்தியில்
பெட்டிக்குள் இருந்தாள்
நீண்ட உறக்கம் அடைந்த யுவதி

—-
avathanikajan@yahoo.ca

Series Navigation

author

கஜன்

கஜன்

Similar Posts