வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 7-அது..அவன்..அவள்.!

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

வெண்ணிலாப்ரியன்.


வருடக்கரைசலில்
வந்து
வியர்க்க வைத்த
இரவுக்குமிழிகள்
எப்போதும்
நிகழ்த்தியதில்லை அதை.

ஆயிரங்களில்
சுருட்டிக்கொண்ட
புடவைப்பாம்புகளும்
நகைப்பூச்சிகளும்
அற்புதங்களை
காட்டியதில்லை.

குளிரூட்டிய
வாழ்க்கை வசதிகளின்
மேன்மைத்தனங்களும்
பரஸ்பர
ஞாபக- விஷய- ஞான
மேதாவித்தனங்களும்
அவற்றை
சம்பவித்ததேயில்லை.

கனத்த மழையின்
சாரல் நெருக்கிட
பாதி நனைத்துக்
குடை பிடிப்பதிலும்

எதிர்பாரா இரவில் வரும்
இரண்டு ரூபாய்
மணத்திலும்

சாத்தியக்குறைவானதொரு
தளத்தின்
நிகழ்வுக்கணுக்குகளில்
மலரும்
‘நான் ‘ இல்லாத நீயிலும்

நீண்டதொரு
பயணத்தினூடே
அவசரத்திற்கு
கழிவறை
காட்டித்தருதலிலும்

என
மழைக்கால முன்னிருட்டின்
மின்னல் கோடுகளாய்

அமானுஷ்யத்தின்
கால் விரல் நகமாய்

எனக்கான தருணங்கள்
நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன
உன்னைப் புரிந்துகொள்ளுதலில்.

வெண்ணிலாப்ரியன்.

Series Navigation

author

வெண்ணிலாப்ரியன்.

வெண்ணிலாப்ரியன்.

Similar Posts