வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 5 – இரண்டாம் தேடல்

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

வெண்ணிலாப்ரியன்.


குளிரில் பற்கள் நடுங்குகின்றன.
இரவின் திகில்
என்னையும் சிதிலமாக்க
அசாதாரண நிசப்த நிமிடங்களில்
மஞ்சள் பல்பின்
அப்பிய சோகத்தில்
துர்நாற்ற சதைகளின் உயிரோட்டமாய்
என் சுவாசமிருக்க
தேடிக்கொண்டிருக்கிறேன்.

என்
மனைவியின்
தொலைந்து போன மெட்டியை
பிணவறையில்.
—-
வெண்ணிலாப்ரியன்

yemkaykumar@yahoo.com

Series Navigation

author

வெண்ணிலாப்ரியன்.

வெண்ணிலாப்ரியன்.

Similar Posts