அதிசயம்

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

பவளமணி பிரகாசம்


அதிசயமான அதிசயம்
எகிப்திய நாட்டினிலே
அகண்ட பாலைவனத்திலே
அமர்ந்திருக்கும் அதிசயம்
பிரமிடெனும் பிரமாண்டம்

பெண் முக சிங்கமோ
உயர்ந்த கூம்பு வடிவமோ
பொருளற்ற பொருளாய்
அண்ணாந்து பார்க்கும்
பாலகன் விழிகளிலே

பின்னாளில் பின்னின்று
பார்க்க சவாலாய்
பெரிதான மலைப்பாய்
நெஞ்சுக்கு நேரிலே
வாலிப வயதிலே

இன்னும் பின்னால்
செல்லச் செல்ல
சிறுக்கத் துவங்கி
புள்ளியாய் மாறி
மறைந்தே போனது

மாறிய கோணத்திலே
இடைப்பட்ட வெளியிலே
மாறவில்லை அதிசயம்
மாறிவிட்டது பரிமாணம்
அது ஒரு பரிணாமம்

தோள்கள் வளர வளர
கால்கள் நகர நகர
மறைகின்ற உருவம்
குறைகின்ற உக்கிரம்
அது என்ன மாயம்

வலிகள் வடுக்களாய்
மயங்கும் நினைவுகளாய்
அடங்கிய அலைகளாய்
எய்துகின்ற ஓர்நிலை
ஏந்தி வரும் அமைதியினை

Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

author

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்

Similar Posts