க்ருஷாங்கினி
( 1 )
சூடு கொண்டு இழுத்து ஒட்டப்பட்ட
மற்றும்
இறுக்கி முடிச்சிட்ட, பொருளடைக்கப்பட்ட
பிளாஸ்டிக் பைகள் எனைக் கடந்தும்
என் முன்னுமாக வாழ்க்கையெங்கும்;
காற்றும் சற்றே கலந்து
அடைக்கப்பட்ட தயிர்,
அடுத்த நாள் சமையலுக்கான எண்ணெய்,
பகவானுக்கான மலர்,
பல்போனவருக்கான மிருதுவான சபோட்டா,
மொறுமொறுப்பான பாப்கார்ன்,
கொஞ்சம் கனவுகள்,
அலுவலகத்தில் வீசியெறியப்பட்ட
கடும் சொற்கள் அடைக்கப்பட்டதாய்
மற்றொன்றும் இன்னமும்கூட
தாய்,மனைவி மற்றும்
தனித் தனித் தனியாய் அடைக்கப்பட்ட
உறவுகள் கொண்டதாய்-
இணைந்தால் கெட்டுவிடுவதாய்
எதிரெதிரானதாய்
இணையமறுப்பதாய் என
எல்லாவற்றையும் கொண்ட பெரிய
பிளாஸ்டிக் உறையாய்
குளிர்பதனப் பெட்டியின் கருவரையில்
அடைக்கப்பட்டு இறுகிய கெட்டிப்பாலென
இழுத்து சீலிட்ட
பிளாஸ்டிக் உறையுள் ஜில்லிட்ட நானும்,
கடந்த காலத்திலும்
நிகழ் காலத்திலும்
எதிர் காலத்திலும் கூட
எங்கெங்கும் எதிர்ப்படும் பிளாஸ்டிக் உறைகள்
உடன் கூடிய நெடுவழிப் பாதையின்
நெடும் பயணமிது.
—-
( 2 )
கூடும் கூரையுமின்றி
ஓடும் வண்டியின் மேற்பரப்பில்
சிறிய பெரிய பச்சை மண் மூர்த்திகள்;
அடுக்க இயலாதென்று பரத்தி வைக்கப்பட்டு
சக்கரம் கொண்டு அலுங்காமல்
இழுத்துச் செல்லப்படுகின்றன-
ஆங்காங்கின் தேவைக்கேற்ப.
தந்தையின் வாகனமாயும்
நந்தனின் கண் மறைப்பதாயும்
விடைத்து நின்ற விடைகள்
மணியோசையுடன்
இன்றோ ?
காயடிக்கப்பட்டு கால்களில் லாடமிட்டு
சாட்டையடியும் பட்டு-
சவாரிக்காரனின் தனயனை
மெலிந்து சுமந்து செல்கின்றன,
தார்ச்சாலைகளில்
துதிக்கவும், மிதிக்கவும், கரைக்கவும்,
—-
( 3 )
தொடர் நிகழ்
இழுத்துக் கட்டப்பட்ட நீலவானில்
குறுக்காவும் கோடாகவும்
புள்ளியென்றும் பறவையென்றும்- பின்
பெரியதாய் கண்களுக்கு அருகாகவும்
விஸ்வரூபம் எடுத்துத் தரைமீதாகவும்
வண்ணப் புகையும் வண்ணமற்ற
வெண்புகை மேகக்கோடிட்டும்
மல்லாந்து, நிமிர்ந்து,’சர்’ரெனப் பாய்ந்து
கீழிறங்கி வட்டமடித்து சப்தமிட்டு
எத்தனையோ வித்தை காட்டும்.
பெரும் கோபுரங்களில் மறைந்தும்
சற்றே கண் சிமிட்டும் நேரத்தில்
வெயில் பளபளக்க வெளிப்பட்டும்
வாயைப் பிளக்கவைக்கும்
விமானம் அன்று,
எப்போதும் போலன்றி
உயர்ந்த கட்டிடம் பிளக்க
உயிர் பிளக்க, நலம் பிளக்க
புகை கிளப்பி ஊடுருவி
அழித்தது; அழிந்தது.
—-
( 4 )
பிரம்ம விருட்சம்
____
இடைவெளி இன்றி அந்த உயர
மரத்தில் அடுக்கப் பட்டிருந்தன
கம்பளிப் பூச்சிகள்-
நெருக்கி யடித்தாலும் கனவுகள் சுமந்தபடி.
எட்டா உயரத்தில்
ஏணி ஏறி, உச்சி வெயிலில்
எட்டிவந்தன தீயின் கங்குகள் சுற்றிலும்;
அங்கிங்கென்று அலைந்து சிதறியவை
ஒன்றன்மீது ஒன்றேறி-
கொதித்துக் கொத்தாகிக் குவியலாயின.
தப்பிக்கும் எண்ணத்தில்
சற்றே பின் நாளில் வெளிவரும் உமிழ்நீர்
உடனே சுரக்கக் கூட்டுப்புழுவாக
முயன்று தோற்றுத் தொங்கின
இழை முடிவில் வாய் வழியே-
கொத்தாகிக் குவியலாயின கொதித்து.
அள்ளையில் இறகு முளைத்து
வண்ணம் பல பரப்பி
அனைவரையும் ஈர்க்கும் -அவை
வண்ணத்துப் பூச்சிகள் ஆகாமலேயே
நிணநீர் வெளிவர, பச்சை ரத்தம்
பொசுங்கப் பரவிய சதை மணத்துடன்
கொதித்துக் கொதித்துக்-
கொத்தாகிக் குவியலாயின.
____
( 5 )
உயிர்
____
சிறு புழுமாட்டப்பட்ட கொக்கிநுனி நைலான் நூலுக்கோ
பிளாஸ்டிக் மணி மிதக்கும் நைலான் சதுரப் பரத்தலுக்கோ
பாலிதீன்பையினுள் அடைக்கப்பட்ட சிறு நீர்த் தேக்கம் தவறவிட்டோ
இங்கே தரையில் மண்ணில் கிடக்கிறது இந்த மீன்.
கண்களையும் பின் சதைகளையும் குறிவைத்துப் படையெடுக்கும்
அசையும் கண்ணிகொண்ட கயிறென வளைந்து வளைந்து எறும்புசாரி.
மின்னலும் இடியும் குளிர் காற்றும் சிறு தூரலும் மணமும்
ஒவ்வொரு துளியாய் மண்ணிலிறங்கி தாரையாகி
சிற்றோடையாகி சுழித்து மண்கலந்து பள்ளம் நோக்கி
சிறுநதியென சுழல்கொண்டு சுற்றிலும் நீர் பரவ,
எறும்பற்றுப் போனாலும் உயிர் காற்றுக்கு சுழித்தோடும் நீரிருந்தும்
அசைவற்று பிளாஸ்டிக் தாளென நீரின்மீதாக
மிதந்து செல்கிறது மீன்.
____
க்ருஷாங்கினி
nagarajan62@vsnl.net
- அ.முத்துலிங்கம் பரம்பரை -2
- செல்லமே – ஆனந்த விகடன் சினிமா விமரிசனம் (கரெக்ட் செய்யப்பட்டது)
- ஆட்டோகிராஃப்-20 – – “பூங்கதவே தாள் திறவாய்”
- புத்தகம் : ஹா ஜின் எழுதிய ‘காத்திருப்பு ‘ : அதிகாரத்தின் வாசலில் யாசிக்கும் கைகளுடன்….
- Submission – ஒரு குறும்படம், மற்றொரு ஃபட்வா
- மெய்மையின் மயக்கம்-19
- தார்மீகமிழந்த சாமர்த்தியங்கள்
- பதுங்கியிருக்கும் பாளையப்பட்டு…:
- முப்பதாண்டு கால முயற்சி
- சொன்னார்கள்
- கடிதம் செப்டம்பர் 30,2004 : வசூல்ராஜா NRI. அல்லது பாத்திரம் அறிந்து பிச்சையிடு.
- கடிதம் செப்டம்பர் 30 ,2004 : Forrest Gump – சிப்பிக்குள் முத்து…. பற்றி கமல்
- உரத்த சிந்தனைகள்- 1
- கடிதம் செப்டம்பர் 30,2004 – தமிழ்ச்செம்மொழி – பார்வைகள்!
- மோசடி மேற்கோள்கள் மூலம் ஒரு ஜிகாத்
- கடிதம் செப்டம்பர் 30,2004
- கடிதம் செப்டம்பர் 30,2004
- கடிதம் செப்டம்பர் 30,2004 – திரு.நாக.இளங்கோவன் அவர்களின் சிந்தனைக்கு சில
- கடிதம் செப்டம்பர் 30,2004 – மஞ்சுளா நவநீதனுக்கு ஒரு வேண்டுகோள்!
- கடிதம் செப்டம்பர் 30,2004 – பித்தனுக்குக் கடிதம்
- மக்கள்தெய்வங்களின் கதைகள் 3-தோட்டுக்காரி அம்மன் கதை
- காவேரி உற்பத்தியாகும் கர்நாடகம்
- ஒரு முன்னோடியின் பின்னாடி
- சினிமா — முக்கிய அறிவிப்புகள்
- சென்றவாரம் பற்றி சில குறிப்புகள் (9/29/2004, பெரியாரின் பெண்ணுரிமை கருத்து, சாதி ஒழிந்தால்தான், வருமானம் 3,068 பில்லியன் டாலர்,
- அறிவிப்பு: நியூயார்க் மாநகரில் உத்தமர் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்
- மெல்ல விழுங்கும் மாஃபியாக்கள் (சென்ற வாரத் தொடர்ச்சி)
- எதிர்பார்ப்பு
- பிழை திருத்தம்
- எனக்கென்று ஒரு மனம்
- ஐந்து கவிதைகள்
- பெரியபுராணம் — 11
- பிரிக்க முடியாத தனிமை
- பகவத் கீதை எனும் உண்மையான உதய சூரியன்
- இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (2)
- சிலந்தி வலை சிக்கல்கள்
- இந்திய அணுவியல் விஞ்ஞான மேதை டாக்டர் ராஜா ராமண்ணாவின் மறைவு (1925-2004)
- அதிசயம்
- இயற்கைக் கோலங்கள்
- களை…
- கூர் பச்சையங்கள்
- நீலக் கடல் -(தொடர்) – அத்தியாயம் – 39