பூகம்பம்

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

பனசை நடராஜன்


வறண்டு போகும் வரை
நீரை உறிஞ்சி எடுப்பதால்
உறங்கும் பூமி-சற்று
புரண்டு படுக்கிறதோ ?!
எதிர்காலம் கணிப்பதாய்
ஏமாற்றும் எத்தரை
ஏளனம் செய்யவே
எதிர்பாராது வருகிறதோ ?!
ஆலைக் கழிவோடு
அடர்புகையும் சூழ்ந்ததால்
பூமி மூச்சுத் திணறி
புரையேறித் தும்மியதோ ?!
நிரந்தரமல்ல-நாம்
நிறுவிய யாவுமே என
நினைவூட்டத்தான்
திடுமென வருகிறதோ ?!

பனசை நடராஜன்,சிங்கப்பூர்
(feenix75@yahoo.co.in)

Series Navigation

author

பனசை நடராஜன், சிங்கப்பூர்

பனசை நடராஜன், சிங்கப்பூர்

Similar Posts