அநாதை

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

தீபம்கோபி


உணர்வுத் தீண்டலில்

உயிர்த்த மொட்டுக்கள்,

பொதுமை பெயரொடு

பூத்தப் பூக்கள்.

மாலையில் சேராமல்

மண்ணில் வீழ்ந்தன- இந்த

மணம்வீசும் மலர்கள்.

விதைத்தவனும் தெரியவில்லை

சுமந்தவளும் சொந்தமில்லை

படைத்தவன் இடம்தேடி

பசியோடு அலையும்

பரிதாப ஜீவன்கள்

நாங்கள்….

வெளிச்சத்தை தேடும்

திரியில்லா தீபங்கள்.

– தீபம்கோபி, சிங்கப்பூர்.

feenix75@yahoo.co.in

Series Navigation

author

தீபம் கோபி - சிங்கப்பூர்.

தீபம் கோபி - சிங்கப்பூர்.

Similar Posts