தமிழவன் கவிதைகள்-பனிரெண்டு

0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 46 in the series 20040701_Issue

தமிழவன்


மறந்துபோன இளம்சிவப்புப்
பூ தோன்றுகிறது பூதாகரமாய்,
கனவில்லை.

பக்கத்தில் தாளில் உறையும்
புகைப்படத்திலிருந்து
மனதிற்குள் வந்து நிஜமாகின்றன
பெயர்தெரியா ந்ீல, மஞ்சள் பூக்கள்.

வெளிப்படாத கண்ணீர்
நெஞ்சில்.

விதியென்னும் வேலிகள்
பலமாய் இறுகுகின்றன.

தொடங்கியதும்
முடிவதும் பூரணமாய்
தெரியாநிலை
நிரந்தரமாகின்றது.

பாதங்கள் வந்துசேரும் நிழல்
நீழ்கிறது இந்த வயதில்

சிறுவயதில் அவன் சொன்னது
நினைவு வருகிறது
போகாதே என்று.
—-

Series Navigation

author

தமிழவன்

தமிழவன்

Similar Posts